முன்மாரியும் பின்மாரியும் FORMER AND LATTER RAIN 60-03-03 1. நாம் நம்முடைய தலைகளை சிறிது நேரம் ஜெபத்திற்கு தாழ்த்துவோமாக. 2. எங்கள் பரம பிதாவே, நாங்கள் உம்மை பிதா என்று சொல்லும் போது, உம்முடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறோம் என்பதை அறிந்து உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இந்த இரவின் கூட்டத்திற்காக உம்முடைய ஆசீர்வாதத்தை நாங்கள் கேட்கிறோம்; நீரே மகிமையை எடுத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென். 3. நீங்கள் அமரலாம். இப்பொழுது, கடந்த மாலை உங்களை நான் சிறிது நேரம் பிடித்து வைத்தேன். அதற்காய் என்னை மன்னியுங்கள். நான் சொல்ல வேண்டிய காரியங்கள் அநேகமாய் இருந்தபடியால், மேலும் நீங்களும் ஒரு நல்ல பார்வையாளர்களாய் இருந்தபடியால், சிறிது நேரத்திலே சொல்லி முடிப்பது மிகக் கடினமாய் இருந்தது. 4. இப்பொழுது, என்னிடம் அநேக முறை கேட்கப் பட்டுள்ளது, "சகோதரன் பிரன்ஹாம், எப்பொழுது நீங்கள் சுகமளித்தலின் ஆராதனைகளை துவங்கப் போகிறீர்?" என்று. 5. நாம் அதை எல்லா இரவும் பெற்றிருக்கிறோம். நாம் இப்பொழுது ஆத்தும சுகமளித்தலை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். அதன் பின்னர் மற்ற எல்லாம் தானாக அதின் ஸ்தானத்தில் அமையும். நாம் நம்முடைய ஆத்துமாவை நேராக்கும் வரையில், பின்னர் நாம் விசுவாசத்தை பெற்றுக் கொள்வோம். 6. இந்தக் கட்டிடத்தில் ஒலி அமைப்புகள் சற்று மோசமாக இருக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஆனால், இன்றிரவு அது நன்றாக இருக்கிறது, ஏனென்றால் அது எனக்கே எதிரொலிக்கிறது என்று நான் நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். இங்கே எதிரொலி இல்லை. இந்த ஒவ்வொரு கருவிகளும் ஒன்றை ஒன்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறபடியால் சற்றுக் கடினமாக இருக்கிறது. ஆனால், பின்னால் அமர்ந்திருக்கிற உங்களால் சரியாகக் கேட்க முடிகிறதா? பின்னால் இருக்கிற உங்களால் நன்றாகக் கேட்க முடிகிறதா? கேட்க முடியவில்லையா? இங்கே இருக்கிறவர்கள்? பின்னால் அமர்ந்திருக்கிற உங்களால் சரியாகக் கேட்க முடிகிறதா? நல்லது, அது பரவாயில்லை. 7. இப்பொழுது, நான் ஒரு அறிவிப்பு செய்யப் போகிறேன். கர்த்தருக்கு சித்தமானால், சனிக்கிழமை இரவு... வருகிற சனிக்கிழமை இரவு, யாருக்கும் ஆராதனை இல்லையென்று, நான் நினைக்கிறேன். நாம் இங்கே சந்திப்பதற்காகக் கூடி வருகிறோம். நாம் யாருடைய ஆராதனையிலும் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், நாம் எதிர்பாராத விதமாய் சீக்கிரமாய் வருகிறோம். மேலும், வெளிநாடுகளுக்கு மீண்டும் செல்லுவதற்கு முன்பாக அது ஒரு சிறிய நேரமாக இருக்கும். மேலும், நாம் இங்கே ஊழியக்காரர்களோடும் மற்றும் பீனிக்ஸில் உள்ள நல்ல மக்களோடும், நித்தியத்தைக் கழிக்கப் போகிற நம்முடைய விலையேறப் பெற்ற நண்பர்களோடும் ஐக்கியம் கொள்ள வருகிறோம். ஆகவே இப்பொழுது, சனிக்கிழமை இரவு, கர்த்தருக்கு சித்தமானால், நான் முதல் முறை பீனிக்ஸ்க்கு வந்த போது நாம் பெற்றிருந்த பழைய விதமான ஜெப வரிசையைக் கூடுமானால் அந்த இரவில் நான் வைக்க விரும்புகிறேன். எல்லாரையும் அழைத்து வரிசையில் நிறுத்தி அவர்களுக்காய் ஜெபிக்க இங்கே கொண்டு வாருங்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்கும் வரை அவர்களுடனே இருங்கள். நான் அதை விரும்புகிறேன். 8. மேலும், நான் நினைக்கிறேன், நான் அதிகமாய், வெளிப் பாடுகளுக்கும் வரங்களுக்கும் அதிக நேரத்தை செலவழிக்கிறேன். இப்பொழுது, வரமானது உங்களை சுகப்படுத்துவதில்லை. வரங்கள் சுகப்படுத்தாது. வரங்கள் என்பது நாம் நம்மை சிறிது இளைப்பாற்றி கொள்ளு வதற்கான ஒரு வழியாகும். மேலும், நீங்கள் தேவனிடத்தி லிருந்து ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி, நீங்கள் பரிசுத்த ஆவியானவருக்கு உங்களை எந்த விதமாக ஒப்புக்கொடுக்கிறீர்கள் என்பது தான். வரங்கள் அவ்விதமாகத்தான் கிரியை செய்கின்றன. 9. இப்பொழுது, இன்றிரவு ஒரு சிறிய பொருளின் பேரில் நீங்கள் என்னோடு வேதத்தைத் திருப்புங்கள். இப்பொழுது என்னுடைய கைக்கடிகாரத்தில் ஒரு ஒலிக்கடிகையை (Alarm) வைத்திருக்கிறேன்; நான் அதைக் கூர்ந்து கவனிக்க போகிறேன். உங்களால் அதைக் கேட்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அது என்னுடைய கையில் அதிர்வை உண்டாக்கும். அப்பொழுது இது முடிக்க வேண்டிய நேரம் என்று நான் அறிந்து கொள்வேன். ஆகவே, கூடுமானால் இன்று இரவு மற்றும் இந்த வாரம் முழுவதும் உங்களை சற்று முன்னதாகவே அனுப்பிவிட முயற்சிக்கிறேன். 10. நான் நினைக்கிறேன் சகோதரன் டேவிட் இன்று என்னிடம் ஏதோ ஒன்றை சொன்னார், அது என்னவென்றால் செவ்வாய்க்கிழமை ஊழியக்காரர்கள் கூட்டத்தில் அவருக்கு பதிலாக என்னை பேசும்படி கேட்டுக் கொண்டார். ஊழியக்காரர்களை சந்திப்பது நல்லதுதான். ஆனால், நான் ஒருபோதும் ஒரு போதகனின் ஸ்தானத்தை எடுத்துகொள்ள மாட்டேன். ஏனென்றால், நான் ஒரு போதகன் அல்ல. ஆனால், செவ்வாய் காலை எங்கு நியமிக்கப்பட்டிருக்கிறதோ அங்கே பீனிக்ஸிலுள்ள ஊழியக்காரர்களை சந்திக்கவும் அவர்களோடு ஐக்கியம் கொள்ளவும் நான் விரும்புகிறேன். 11. இப்பொழுது, சகரியா 14ம் அதிகாரத்திற்கு நாம் திருப்புவோம். மேலும் பின்னர் ஏசாயா 12ம் அதிகாரத்திற்கு திரும்பிப் போக விரும்புகிறேன். நாம் வார்த்தையின் ஒரு பாகத்தை வாசிப்போம். முதலாவது சகரியா 14ம் அதிகாரத்தை வாசிக்கிறேன்: 6 மற்றும் 7வது வசனங்களை வாசிக்கிறேன். நீங்கள் அதைக் குறித்துக் கொள்வீர்களானால், அது சகரியா 14: 6 மற்றும் 7. அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும். ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். 12. ஏசாயா 21ல், ஏசாயா 21: 11&12. தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க, அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான். 13. அது சூரியன் அஸ்தமிக்கும் நேரமாக இருந்திருக்க வேண்டும். சூரியன் மேற்கை நோக்கி அஸ்தமித்துக் கொண்டிருந்தது, அது ஒரு அசாதாரணமான நாளாயிருந்தது, ஒரு நிச்சயமில்லாத நாளாய் தோன்றினது. அங்கே அநேக காரியங்கள் போய்க் கொண்டிருந் திருக்கும். "எதிரி நெருங்கிக் கொண்டிருக்கிறான்" என்று கோபுரத்திலிருந்து எச்சரிக்கையின் மேல் எச்சரிக்கை வந்து கொண்டிருந்தது. சூரியன் மேற்கிலே இறங்க துவங்கின போது, அந்த சாயங்கால வெளிச்சம் பகல் அதிகமாய் செலவழிக்கப் பட்டுவிட்டது என்பதை பிரதி பலித்து காட்டியது. அது இன்றைய காலத்திற்கு ஒரு சரியான காட்சியாக இருக்கிறது. சாயங்கால வெளிச்சங்கள் மின்னுகிறது, பகலானது அதிகமாய் கடந்து விட்டது. 14. புருஷர்கள் தங்களுடைய வேலையிலிருந்து திரும்பும் போதும் மற்றும் தாய் ஆகாரத்தை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கும் போதும், தெருக்களில் ஜனங்கள் தண்ணீர் எடுத்துக் கொள்கிற பொது கிணற்றண்டையில், இரவுக்காக தண்ணீர் எடுக்க வாலிபப் பெண்கள் வருகிறதை நான் பார்க்கிறேன். அது அந்நாளின் வழக்கமாய் இருந்தது. வாலிபப் பெண்களாக இருக்கிற அவர்கள் கூடி பேசும்போது, இப்பொழுது சிறிது நேரம் உள்ளே நுழைந்து அவர்களுடைய உரையாடலை நாம் பார்ப்போம். மேலும், இதை அந்த நாளோடும் இந்த சாயங்கால வெளிச்சத்தின் நாளோடும் ஒப்பிடுவோம். 15. வாலிபப் பெண்கள் தாங்கள் போகப் போகிற ஒரு நடனத்தைக் குறித்தும் அல்லது ஒரு கூட்டத்தைக் குறித்தும் மற்றும் அதற்கு தாங்கள் என்ன உடையை அணியப் போகிறார்கள் என்பதைக் குறித்தும், மேலும் அவர்கள் பெற்ற அந்த புதிய காதல் சந்திப்பைக் குறித்தும் பேசுகிறதை என்னால் கேட்க முடிகிறது. அதை இந்நாளோடு ஒப்பிட என்னால் முடியாது, ஏனென்றால், அவர்கள் அணிந்ததுடன் ஒப்பிடும் போது இன்றைக்கு இவர்கள் அணிகிறதை ஒரு உடை என்று கூட சொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். 16. ஆனால் அவர்கள் ஆயத்தமாகிக்கொண்டும், அன்று இரவு நடனத்தில் தாங்கள் எப்படிப்பட்ட நேரத்தை பெற்றிருக்கப் போகிறார்கள் என்பதைக் குறித்தும் பேசுகிறார்கள். கடைசியாக ஒரு வாலிப் பெண் கூறி இருக்கலாம், "ஸ்திரீகளே, அந்த கோபுரத்தில் இருக்கிற பைத்தியக்காரன் பேசினதைக் கேட்டீர்களா? இன்றைக்கு அவன் அந்த கோபுரத்திலிருந்து அனுப்பின எல்லாச் செய்திகளையும் கேட்டீர்களா? அந்த வயதான கிறுக்கன் எனக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறான். அவன் என்னை நரம்பு தளர்ச்சி அடையச் செய்கிறான், என் தாய்க்கும் கூட அப்படித்தான் தோன்றுகிறது, எங்களுக்கு அப்படியே தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. எப்பொழுதும் நாம் மிகவும் பொல்லாதவர்கள் என்றும், தேவன் நம்முடைய பாவங்களுக்காக நம்மை நியாயந்தீர்க்கப் போகிறார் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான். தேவன் நம்மை நியாயந்தீர்க்காத படிக்கு அவர் அவ்வளவு நல்லவர் அல்ல என்பது போல் அவன் பேசுகிறான். நாம் ஒரு பக்தியுள்ள ஜனங்கள். நாம் ஒரு பக்தியுள்ள தேசம்; உலகம் முழுவதிலும் நாம் ஒரு பக்தியுள்ள தேசம் என அறியப்பட்டிருக்கிறோம்." 17. நான் இப்பொழுது இந்த உரையாடலை சற்று நிறுத்துகிறேன். பக்தியுள்ள தேசமாயிருப்பதற்கும் தேவனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை; அது தனிநபரைச் சார்ந்ததாயிருக்கிறது. அது நீ. நாம் ஒரு பக்தியுள்ள தேசம் என்று அழைக்கப்படுகிறோம். ஆனால், இரக்கமும் நன்மையும் அதற்கு வெகுதூரமாய் இருக்கிறது. 18. மேலும் அவர்கள் இவ்வாறு கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, நான் அன்று ஒரு இராத்திரி என் தகப்பனார் பேசுவதை கேட்டேன், அவர்கள் ஒரு வாரியக் கூட்டத்தைக் கூடிய சீக்கிரம் நடத்தப் போகிறார்கள். நம்முடைய பாவங்கள் மிகப் பெரிதாய் இருக்கிறது அதற்காக தேவன் ஒரு தேசத்தை அனுப்பி நம்மை முற்றிலும் அழித்துப் போடுவார் என்று எப்பொழுதும் அந்த கோபுரத்திலிருந்து எச்சரித்துக் கொண்டிருக்கிற இந்தப் பைத்தியக்காரனை அவர்கள் அடுத்த வாரியக் கூட்டத்தில் வெளியேற்றி விடுவார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அந்த வாரியத்திலிருந்து அவனை உடனடியாக விலக்கி விடுவார்கள்; இந்த நாளின் நவநாகரீக ஜனமாகிய நமக்கு அவன் ஒரு மிகப்பெரிய கிறுக்கனாய் இருக்கிறான். அப்படிப்பட்ட ஒன்றை நாம் வைத்திருக்க முடியாது. நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரித்து நம்மையெல்லாம் அவன் குற்றப் படுத்துகிறான். நாம் இனி அதை பொறுத்துக் கொள்ளப் போவதில்லை. 19. என் தாய் கூறினாள், அவர்கள் சீட்டு விளையாட்டுக்கு போகும்போது அந்த ஜாமக்காரன் அவர்களை கூப்பிட்டு, அதைச் செய்வது தவறு; அதைச் செய்வது தவறு; தேவன் உன்னை நியாயந்தீர்ப்பார் என்று கூறுவானாம். மேலும், என் தாயும் தகப்பனும் தங்கள் சபையில் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். அப்பொழுது ஒரு நாள் பிரசங்கி கூறினார், அல்லது ஆசாரியன் அதைக் குறித்து பேசினார். அவர், "அந்த மனிதன் ஒரு மதவெறியனேயன்றி வேறொன்றும் இல்லை," என்று சொன்னார். ஏனென்றால், ஆசாரியன், அவன் ஜனங்களோடு ஒரு விதமாக ஒத்துப் போக வேண்டும், அப்படி இல்லையென்றால், அவன் பிரசங்க பீடத்தில் தன்னுடைய வேலையை இழந்துவிடுவான். 20. எதையும் பொருட்படுத்தாமல், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாய் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிற தேவ மனிதர்களை பெற்றிருக்கிறது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. மேலும் அந்த சுவிசேஷ மானது, அதனுடைய வல்லமையோடு பிரசங்கிக்கப்படும் போது, அதை ஏற்றுக் கொள்ள ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது நான் சந்தோஷப்படுகிறேன். 21. ஆனால் இது மாலைவேளை கடந்து போய்க் கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அந்த வாலிபப் பெண்கள் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் அந்த வாலிபப் பையன்கள் மதுக்கடையில் கூடிக் கொண்டு (மது அருந்திய பிறகு, இப்பொழுது போல அந்த ராக் அண்ட் ரோல் களியாட்டுகளை செய்து)... சிறிது நேரம் கழித்து, மது அருந்திய பின், பாவம் அதன் வழியே வந்தது. இருள்சூழும்போது, பிசாசுகள் மற்றும் பிசாசுகளால் பீடிக்கப்பட்ட ஜீவன்கள் நகரத் துவங்குகின்றன, அது சற்று விநோதமாக இருக்கிறது. 22. இங்கு சில காலத்திற்கு முன்பு ஒரு இதழில் நான் பார்த்தேன், அதில் ஏதோ ஒரு திரைப்பட நட்சத்திரம், இரவானது ஜீவிப்பதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. இரவானது உறங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இங்கே பாலைவனத்தில் இருக்கும் ஜனங்களாகிய நீங்கள் கவனிப்பீர்களானால், இரவு நேரத்தில் சர்ப்பங்களும், தேள்களும், பாம்புகளும் மற்றும் பல்லிகளும் சிலந்திகளும் மற்றும் பொல்லாத வைகளும் ஊருகின்றன. இரவு நேரத்திலே கள்ளத்தனமாய் உலாவுகிறவர்கள் பொல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இரவு மிகவும் பொல்லாங்கான தாயிருக்கிறது. ஏனென்றால், அது இருளாக இருக்கிறது. ஆனால், இங்கே நாம் பார்த்து நடப்பதற்கு ஒரு வெளிச்சம் இருக்கிறதற்காக தேவனுக்கு நன்றி. இருளிலே நடக்கிறவர்கள் குருடராய் இருக்கிறார்கள். தாங்கள் எங்கே போகிறோம் என்று அறியாமல் இருக்கிறார்கள்; ஆனால் வெளிச்சத்தின் பிள்ளைகள் தாங்கள் எங்கே போகிறோம் என்று அறிந்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் வெளிச்சத்தில் நடக்கிறார்கள். இயேசுவே அந்த வெளிச்சம். "நானே வெளிச்சமும், சத்தியமும், ஜீவனும், வழியும்." 23. மேலும், அந்த மதுக்கடையில் அவர்கள் அவ்விதமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது சற்று நேரம் கழித்து என்னால் அதைக் கேட்க முடிகிறது, சில நிமிடங்களுக்கு அந்த நடனங்கள் நின்று போய் விட்டன, அந்த ஜாஸ் இசை நின்று விட்டது, மேலும் யாரோ சொன்னார்கள், "அந்த கோபுரத்தின் மீது இருந்த அந்த பைத்தியக்காரக் கிழவன் கத்திக் கொண்டிருக்கிறதை நீங்கள் கேட்டீர்களா? அவன் மறுபடியும் பேசுகிறான் ஏதோ நியாயத்தீர்ப்பு வருகிறது என்று சொல்லிக்கொண்டு தலையைத் துலுக்கிக் கொண்டு நாம் எல்லோரும் விழுங்கப்பட்டு போவோமாம், துடைத்துப் போடப்பட்டு போவோமாம், அல்லது ஏதோ ஒரு தேசம் நம்மீது படை எடுத்து வந்து நம்மையெல்லாம் சிறை பிடித்துக் கொண்டு போகப் போகிறார்களாம். ஏன் அவர்களுக்கு தெரியாதா? நாம் தான் இந்த உலகத்திலேயே மிகவும் முன்னேறிய ஒரு தேசம் என்று? மற்ற தேசங்களைக் காட்டிலும் நாம் நன்றாக பாதுகாக்கப்பட்டவர்கள் என்று? யார் வந்தாலும் நாம் அவர்களை ஊதித்தள்ளி விடுவோம்" என்றும் அவர்களுக்கு தெரியாதா! 24. ஆனால், அந்த நேரத்திலேயே சத்துருவானவன் அவர்கள் மேல் ஊர்ந்து வந்து கொண்டிருந்தான் என்று அறியாமல் இவ்விதமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் நடுக்கத்தோடு இருந்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாளானது மிகவும் மகத்தானது என்பதில் ஆச்சரியம் இல்லை. 25. சில காலங்களுக்கு முன்பாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சிங்கம் பதுங்கி பதுங்கி வந்து ஒரு ஆட்டுக்குட்டியின் மேல் பாய்ந்து அதைக் கிழித்தெறிவது போன்ற ஒரு படம். அந்த சிறிய ஆட்டுக் குட்டி மிகவும் பதற்றமாக இருந்தது. அதனால் அந்த சிங்கத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் சிங்கமோ அந்த ஆட்டுக்குட்டியை மோப்பம் பிடித்து விட்டது. ஆனால் அது பதுங்கிக் கொண்டிருந்தது. கீழே படுத்து ஊர்ந்து ஊர்ந்து கிட்டே நெருங்கி வந்துக் கொண்டிருந்தது. அந்த சிறிய ஆட்டுக்குட்டியோ உயரமாக வளர்ந்த புல்லுகளுக்குள்ளாக மேய்ந்து கொண்டிருந்தது. ஆகவே, அந்த சிறிய ஆட்டுக்குட்டி அந்த சிங்கத்தை கவனிக்கவில்லை. ஆனால், அதற்கு இன்னொரு புலன் ஒன்று இருந்தது. அது ஒரு தொல்லை அருகில் வந்து கொண்டிருக்கிறது என்று சொல்லுவது போல, அல்லது எச்சரிக்கை செய்வது போன்றது. தேசங்களுடைய காரியமும் இன்றைக்கு அதுதான். உலகத்தினுடைய காரியமும் அதுதான். இன்னும் சொல்லப்போனால், பாவிகளுக்குள்ளும் அங்கே ஒரு பதற்றம் காணப்படுகிறது. 26. நான் இன்று அங்கே வெளியிலே கார் ஓட்டிக் கொண்டு, தெற்கு மலையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன். மேலும் நான் வழக்கமாக ஜெபிக்க செல்லும் அந்த இடத்திற்கு அதைப் பார்க்கும்படி அங்கே சென்றேன். அங்கே இப்பொழுது ஒரு வீடு கட்டும் திட்டம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்றை பாராட்ட வேண்டும். நீங்கள் அங்கே சில கள்ளிச் செடிகளை காப்பாற்றி இருக்கிறீர்கள்! ஏனென்றால், அரிசோனா போய்விட்டது. அது அவ்வளவுதான். இனி அது ஒரு பாலைவனம் அல்ல. அன்று அந்த ஆராய்ச்சியாளர் சொன்னது போல், நான் அதை நினைத்துப் பார்க்கிறேன். அரிசோனா மாநிலத்தில் ஒரு காட்டு கழுதை கூட விட்டு வைக்கப்படாது. மிஞ்சி இருப்பவைகளும் ஏதோ ஒரு இடத்தில் தொழுவத்தில் அடைக்கப் பட்டிருக்கும் என நினைக்கிறேன். அது முழுவதும் தோண்டப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு விட்டன. கிழக்கு பாகம் இந்த இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. நாகரீகம் இதன் வழியாக பயணிக்கிறது. அது எங்கெல்லாம் செல்லுகிறதோ, அங்கே அந்த தேசத்தை மாசுபடுத்திவிடுகிறது. தேவனே... அது உண்மையான அரிசோனவாக இருந்தபொழுது எப்படி இருந்ததோ அங்கே நான் வாழ விரும்புகிறேன். அதன் அழகில் சிலவற்றைக் கண்டிருக்கிறேன். 27. இப்பொழுது, நான் வந்து கொண்டிருந்த பொழுது. நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான் கிட்டத்தட்ட மூன்று, நான்கு முறை ஜனங்கள் மீது வண்டியை ஏற்றி இருக்க வேண்டியது. ஜனங்கள் தெருவில் குறுக்கே நெடுக்கே இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மணிக்கு முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டிய இடங்களில் தடைகளை எல்லாம் மீறி, மணிக்கு அறுபது, எழுபது மைல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். காவல்துறை அவர்களை தடுத்துக் கொண்டும், கைது செய்து கொண்டுமிருக்கிறது. ஆனால், அவர்கள் எப்போதும் போல அதே வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு வேகமாக அவர்கள் எங்கே போகிறார்கள்? அது அவர்களுக்கே தெரியாது. நான் உங்களுக்கு சொல்லுகிறேன் நீங்கள் எங்குமே போகப் போவதில்லை. அவர்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள், ஆனால் எங்கே போகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. 28. மேலும் சகோதரனே, அது எங்கு பார்த்தாலும் நிலைவரம் இல்லாத ஒரு சமாதானமாய் இருக்கிறது தேசங்கள் நிலைவரம் இல்லாமல் இருக்கிறது. சபைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஜனங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்கள் எல்லாரும் நிலையற்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். என்ன ஆயிற்று? அது வந்து கொண்டிருக்கிறதான நியாயத்தீர்ப்பு! நீ எனக்கு செவி கொடுப்பது நல்லது. அது வந்து கொண்டிருக்கிறதான நியாயத்தீர்ப்புகள். 29. இப்போது நாம் ஒரு வேளை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பில்லிகிரகாமை வைத்து இரவு பகலாக எழுப்புதல்களை நடத்திக் கொண்டிருக்கலாம், அது அவளை திரும்ப கொண்டு வரப்போவதில்லை. அதை நினைவு கூருங்கள். அது நிச்சயமாக அதைச் செய்யாது. அவள் நியாயத்தீர்ப்புக்கென்று நியமிக்கப்பட்டு விட்டாள். அங்கே வேறு எதுவும் மீந்திருக்கவில்லை. மேலும், நாம் ஏன் இவ்வளவு நரம்புத் தளர்ச்சியுள்ளவர்களாகவும், சோர்வுற்றவர் களாகவும் இருக்கிறோம் என்று ஆச்சரியப் படுகிறோம். ஏன் இந்தப் பைத்தியக்கார விடுதிகளும், இங்கே இருக்கிற மற்ற இடங்களும் நிரம்பி வழிகின்றன என்றும் ஐயுறுகிறோம். அது மதுபானத்தின் காரணத்தினால் தான், மற்றும் பாவம், மற்றும் நரம்புத்தளர்ச்சி, மற்றும் விஸ்கி, மற்றும் தவறான வழியில் செல்லுதல், மற்றும் இரவுவாழ்க்கை, வேதத்தை அலட்சியப்படுத்துதல், தேவனை அலட்சியப்படுத்துதல், பதட்டம், நரம்பு தளர்ச்சி, நிலை குலைந்து போகுதல், உலகம் முழுவதும் இதனால் தான் நிறைந்திருக்கிறது. சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன, பைத்தியக்கார விடுதிகள், இன்னும் சொல்லப்போனால் ஒரு மனநிலை மருத்துவர் இன்னொரு மனநிலை மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்கிறார். மேலும் நாம் அவர்களை அதுபோன்ற விடுதிகளில் பார்க்கிறோம். அது சரி. 30. மேலும் நான் அன்றொரு நாள் இந்த ராக் அண்ட் ரோல் இசைக்குழுவினரை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட திரைப்பட நடிகர்கள், நட்சத்திரங்கள் மற்றும் பாடகர்கள், அவர்களில் மிகவும் புகழ்பெற்ற ராக் அண்ட் ரோல் பையன் ஒருவன், அவன் எப்பொழுதும் தன்னுடன் நான்கு மனநிலை மருத்துவர்களை கொண்டிருக்கிறான் என்று அறிந்து கொண்டேன். ஓ இரக்கம்! நான் சந்தோஷப்படுகிறேன். ஏனென்றால், நமக்கும் ஒரு மனநிலை மருத்துவர் இருக்கிறார், இயேசு கிறிஸ்துவின் சிந்தை, அந்த தேவனுடைய வல்லமை, ஆத்துமாக்களின் எண்ணங்களை பகுத்தறிகிறவர். அவர்தான் கிறிஸ்தவனை எப்பொழுதும் பின்தொடருகிறவர். அதுதான் நம்முடைய ஆறுதல். அவர்தான் நம்மை இயக்குபவர். 31. அதன் பிறகும் இந்த பதற்றம் இருக்கிறதை நாம் பார்க்கிறோம். பார்ப்பதற்கு ஒவ்வொன்றும் நரம்பு தளர்ச்சியுற்று பதற்றத்தோடு இருப்பது போல காணப்படுகிறது நேரமானது முடிந்து போய்விட்டது. கிழக்கும் மேற்கும் ஒன்றை ஒன்று சந்தித்து விட்டது. கிழக்கிலிருந்து முன்னேறி மேற்கு வரும் வரை தொடர்ந்து முன்னேறி வந்து சந்தித்திருக்கிறது. 32. இப்பொழுது நான் வாசித்த வேத வசனத்தில் வேதம் சொல்லுகிறது, கர்த்தரிடத்தில் ஒரு நாள் இருக்கிறது, அது பகலும் அல்ல, இரவும் அல்ல, அது ஒரு மந்தாரமான நாள். இங்கும் அங்கும் எப்படி நகர்வது என்று அறிந்து கொள்வதற்கு போதுமான வெளிச்சம். அந்த நாளில் தான் ஆதி முதல் நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆரம்பம் முதற்கொண்டு சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. வேறொரு சூரியன் அல்ல. கிழக்கில் உதித்த அதே சூரியன் தான் மேற்கில் மறைகிறது. மேலும் நாகரீகமும் சூரியனோடு சேர்ந்து பயணித்து வந்திருக்கிறது. 33. மேலும் இப்பொழுது, இந்தியா, அல்லது, இந்தியா இல்லை, ஆனால் சீனா தான் மிகப் பழமையான நாகரீகம் கொண்ட தேசம். முதலாவதாக அந்த பதிவுகள் நம்மிடத்தில் இருக்கின்றன. இப்பொழுது நாம் மீண்டும் கிழக்கும் மேற்கும் ஒன்றை ஒன்று சந்தித்திருக்கிற அந்த மேற்கு கரைக்கு வந்திருக்கிறோம். நாகரீகம் அதனோடு சேர்ந்து பயணித்து வந்திருக்கிறது. மேலும் கிழக்கிலே முதலாவது பரிசுத்த ஆவி அங்கே தான் அந்த கிழக்கத்திய மக்கள் மேல் ஊற்றப்பட்டார். இப்பொழுது நீங்கள் அதை மறந்து விடக்கூடாது என்பதற்காக நான் இதை மீண்டும் மேற்கோளிடுகிறேன். அவர்கள் தான் அந்த முதல் வெளிச்சத்தை பெற்றுக் கொண்டார்கள். சூ-ரி-ய-ன் (S-u-n) முதலில் கிழக்கில் தான் உதிக்கிறது. அதுபோல கு-மா-ர-ன் (S-o-n) அவரின் வெளிச்சமும் முதலில் கிழக்கத்திய மக்கள் மேல் தான் பிரகாசித்தது. 34. இப்பொழுது, நமக்கு ஒரு மந்தாரமான நாள் இருந்தது. நாம் நடப்பதற்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்படுவதற்கும் போதுமான வெளிச்சம் இருந்தது. நாம் சபைகளை ஸ்தாபித்தோம், மகத்தான லூத்தரன் சபை, மெத்தடிஸ்ட் சபை, பாப்டிஸ்டு சபை, பிரஸ்பிட்டேரியன் சபை, மற்றும் இந்த காலத்திலே தான் இன்னும் அது போன்ற மகத்தான சபைகள் வந்தன. ஆனால், நாம் பெற்றிருப்போம் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட, சரியான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு பின்மாரியை நாம் பெற்றிருக்கவில்லை. கடைசி நாட்களில் ஒரு பின்மாரி இருக்கும். மேலும், முன்மாரியும் பின்மாரியும் சேர்ந்து இருக்கும். இப்பொழுது, அந்த முன்மாரி கிழக்கிலே பெய்தது. பின்மாரியோ மேற்கிலே பெய்யும். மேலும், இந்த பின்மாரியில், முன்மாரியும் பின்மாரியும் சேர்ந்து பொழியும். 35. மேலும் இப்பொழுது, மக்களுடைய விசுவாச மந்த நிலைமையின் காரணமாக சூரியனானது கடந்து வந்து ஒரு மங்கலான ஒளியைக் கொடுத்து கொண்டிருக்கிறது. இயேசு தேவக்குமாரனாய் இருந்தார். நாம் இன்று பேசிக் கொண்டிருந்த வண்ணமாக அவர் தேவனுடைய குமாரனாக எவ்விதம் இருந்தாரோ அதே விதமாக அவர் ஒரு மனிதனாகவும் இருந்தார். முப்பது வயதில், மேலும் அவருக்கு முப்பது வயதாகும் வரை அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்கிற தகவல் நமக்கு இல்லை. அவர் யோர்தானில் யோவானால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பொழுது, அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் அளவில்லாமல் வந்து இறங்கினார். மேலும் "அவருக்குள்ளாக தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீர பிரகாரமாக வாசமாய் இருந்தது." அவர் இம்மானுவேலாய் இருந்தார். தேவன் அவருக்குள் இருந்தார். ஏன்? தேவன் அவருக்குள் இருந்தார். ஏனென்றால், அவர் பாவமில்லாமல் பிறந்திருந்தார். மேலும், தேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுப்பதற்கான வழியைக் கொண்டிருந்தார். ஆகவே, தேவனுடைய தெல்லாம் அவருக்குள் வாசமாய் இருந்தது. 36. இப்பொழுது, நீங்களும் நானும் எந்த அளவுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோமோ, அதைக் காட்டிலும் அதிகமாக தேவனை நமக்குள் பெற்றுக் கொள்ள முடியாது. எந்த அளவுக்கு, கொடுக்கிறோமோ அந்த அளவின்படி... பில்லி பிரன்ஹாம் ஆகிய நான் வழியை விட்டு எந்த அளவுக்கு என்னை விலக்கிக் கொள்கி றேனோ அந்த அளவுக்கு தேவன் உள்ளே வருவார். ஆனால், வில்லியம் பிரன்ஹாம் அங்கே இருக்கும் வரை உள்ளே வருவதற்கு தேவனுக்கு அங்கே வழி இருக்காது. மேலும் உங்களுக்கும் இதே தான். அது நம்மை நம்முடைய வழியில் இருந்து விலக்கி கொள்ளுதல் ஆகும். நாம் சிந்திக்கும் விதமாக பார்ப்பதில்லை, நாம் சிந்திக்கும் விதமாக செயல்படுவதில்லை, ஆனால் நமக்கு பதிலாக அவரை சிந்திக்க விடுவது, மற்றும் நமக்கு பதிலாக அவரைப் பார்க்க விடுவது, பரிசுத்த ஆவிக்கு செவி கொடுப்பது ஆகும். 37. இப்பொழுது, அது கடந்து வந்துள்ளது, மேலும் அது சாயங்கால வேளையில் இருக்கிறது. இப்பொழுது, சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும் என்று வேதம் நமக்கு வாக்குரைத்திருக்கிறது, என்ன விதமான வெளிச்சம்? கிழக்கிலே பிரகாசித்த அதே வெளிச்சம், அதுதான் மேற்கிலும் பிரகாசிக்கும். காலையில் பிரகாசித்த அதே வெளிச்சம் தான் மாலையிலும் பிரகாசிக்கும். இப்பொழுது நாம் இதன் ஊடாகத் தான் வழிநெடுக கடந்து வந்திருக்கிறோம். மேலும், இந்த சாயங்கால நேரத்தில் நிழல்கள் விழுந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், நாமோ வெளிச்சத்தைப் பெற்றிருந்தோம். 38. இப்பொழுது நீங்கள் இதை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த ஜாமக்காரனின் காலத்தில் வந்து கொண்டிருக் கிறதான நியாயத்தீர்ப்பைக் குறித்து அவன் அவர்களுக்குச் சொல்லி எச்சரிக்கைச் செய்தான். ஆனால், அவர்களோ அவனைப் பார்த்து நகைத்து, அவனை பரிகாசம் பண்ணினார்கள். மேலும் வேத வாக்கியங்களில் நாம் பார்க்கிறோம் அதாவது, ஒரு நகரமானது கட்டப்படும் பொழுது அந்த நகரத்தில் முதலாவது கட்டப்படுவது அந்த நகரத்தின் பாதுகாப்பு அரணான அதன் சுவர் தான். 39. மேலும், நகரமானது முற்றிலுமாக பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவர்கள் அந்த சுற்று சுவரின் மீது ஒரு உயரமான கோபுரத்தைக் கட்டி, அதில் ஜாமக்காரன் ஒருவன் இரவும் பகலும் ஜாமம் காத்துக் கொண்டிருப்பான். இருபத்து நான்கு மணி நேரமும் சுற்றும் முற்றும், கிழக்கே, வடக்கே, மேற்கே மற்றும் தெற்கே சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பான். ஏனென்றால், மற்ற எல்லா மக்களும் பார்க்கிறதைக் காட்டிலும் அவன் உயரத்தில் நின்று, தூரமாக பார்க்கக் கூடியவனாக இருக்கிறான். மேலும், மக்களை எச்சரிப் பதே அவனுடைய கடமையாகும். அவன் ஒரு நல்ல ஜாமாக்காரனாக இருந்தால், வந்து கொண்டிருக்கிறதான நியாயத்தீர்ப்பைக் குறித்தும், நெருங்கி வரும் படைகளைக் குறித்தும், வேவுக்காரர்கள் ஊடுருவுவதைக் குறித்தும், இன்னும் வேறு ஏதாவது வந்து கொண்டி ருந்தால் அவற்றையெல்லாம் குறித்து அவன் மக்களை எச்சரிக்க வேண்டும். வருகிற அந்தக் காரியம் எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. அவன் உண்மையில் ஒரு நல்ல ஜாமக்காரனாய் இருப்பான் என்றால் உள்ளே வருகிறதாக அவன் காண்கிற எந்த ஒன்றைக் குறித்தும் நகரத்தில் இருக்கிறவர்களுக்கு அவன் தகவல் தெரிவிப்பான். 40. நான் இங்கே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மேலும், நீங்கள் அதை சரியான விதத்தில் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நகரத்தில் உள்ள மக்களின் ஜீவன் எல்லாம் அந்த ஜாமக்காரனை நம்பி இருக்கும் பட்சத்தில் ஒரு கிட்டப் பார்வை உள்ளவனை அங்கே அந்த கோபுரத்தில் அவர்கள் வைப்பார்கள் என்று எனக்குச் சொல்ல வருகிறீர்களா? அவன்... அவர்கள் ஒரு அரைகுருடனை அங்கே நிறுத்துவார்கள் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை. தேசத்திலேயே மிகவும் சிறந்த பார்வை உள்ளவனை கண்டுபிடித்து அவர்கள் அவனை அங்கே நிறுத்துவார்கள். 41. தேவனும் கூட, அவர் தம்முடைய நகரத்தை கட்டும் பொழுது, அவர் தம்முடைய சபையைக் கட்டும் பொழுது தன்னுடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை கொண்டு மதில் அமைத்தார். மேலும் அவர் அதற்குள் ஒரு ஜாமக்கோபுரத்தையும் அமைத்தார். மேலும் அந்த ஜாமக்கோபுரத்தில்... 42. வேதம் அவருடைய தீர்க்கதரிசிகள் கழுகுகளாக இருக்கிறார்கள் என்று அவர்களைக் கழுகுகளுக்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறது. இப்பொழுது ஒரு கழுகு என்பது மற்ற எல்லா பறவைகளைக் காட்டிலும் உயரமாக பறக்கக் கூடியது. ஒருவேளை வேறொரு பறவை கழுகைப் பின்தொடர்ந்து செல்ல முயற்சித்தால் அது மரித்து விடும். ஏனென்றால், கழுகானது விசேஷித்த விதமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மேலும் அது அதிகமான உயரத்திற்கு பறந்து செல்ல முடியும். பருந்து அதைப் பின்தொடர முயற்சித்தால் அந்த பருந்து ஆகாயத்திலேயே தூள் தூளாக சிதறிப் போகும். அதனால் கழுகை பின் தொடர முடியாது. அதனுடைய இறகுகள் உதிர்ந்து போகும். அது துண்டுகளாகப் பிய்ந்து போகும். ஆனால், கழுகு ஒரு விசேஷித்தப் பறவை ஆகும். 43. இப்பொழுது அந்தக் கழுகு உன்னதங்களுக் குள்ளாக உயரப் பறக்க முடிந்து, ஆனால் அவ்வளவு தூரத்திலிருந்து கீழே இருக்கிறதை அதனால் பார்க்க முடியாது என்றால் அது அவ்வளவு உயரப் பறந்து என்ன பிரயோஜனம்? ஆனால் பாருங்கள் இயற்கையானது அந்தக் கழுகுக்கு ஒரு விசேஷித்த சக்தியைக் கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், அத்தகைய உயரத்தில் பறந்து கொண்டிருக்கிற கழுகை உங்களால் சரியாகக் கூட காண முடியாது. ஆனால், அந்த உயரத்திலிருந்தும் அதனால் கீழே உள்ளதை துல்லியமாக நோக்கிப் பார்க்க முடியும். அவைகளில் சில வற்றுக்கு இரண்டு இறக்கைகளின் ஒரு நுனியில் இருந்து மறுநுனி வரைக்கும் பதினான்கு அடி நீளம் கூட இருக்குமாம். உங்களால் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிற கழுகை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. ஆனால் இந்த பூமியில் நகருகிறதான ஒரு சிறு ஜந்துவை கூட அதனால் அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்க முடியும். இப்பொழுது, தேவன் தம்முடைய தீர்க்க தரிசிகளையும் தம்முடைய பிரசங்கிகளையும் அந்த கழுகுகளுக்குத் தான் ஒப்பிடுகிறார். அவர் தன்னைத் தானே "யேகோவா-கழுகு" என்று அழைத்துக் கொள்கிறார். அவரே ஒரு கழுகாகத்தான் இருக்கிறார். 44. இப்பொழுது, தேவன் நியமித்துள்ளார், மனிதர் களை அல்ல, தேவன் சபையில் முதலாவது சுவிசேஷ கர்கள் அல்லது அப்போஸ்தலர்கள், இரண்டாவது தீர்க்க தரிசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் மற்றும் இது போன்றவர்களை நியமித்திருக்கிறார். தேவன் அவர்களை சபையில் நியமித்துள்ளார். தேவன் அவர்களை அங்கே நியமித்திருப்பார் என்றால் அவர்கள் அந்த வேலைக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது என்று சொல்லுகிறதான அப்படிப்பட்ட ஒரு மனிதனை தேவன் அந்த கோபுரத்தின் மீது, அது போன்ற ஒரு ஸ்தானத்தில் வைக்க மாட்டார். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று வேதம் சொல்லும் பொழுது, அவர் அப்படி இல்லை என்று சொல்லுகிறதான அப்படிப்பட்ட ஒரு மனிதனை, அப்படிப்பட்ட ஒரு ஸ்தானத்தில் ஒரு தீர்க்கதரிசி யாகவோ அல்லது ஒரு ஞானதிருஷ்டிக்காரனாகவோ இருக்கும்படியாக தேவன் வைப்பதில்லை. வரப்போகிற தேவ கோபத்தைக் குறித்து, ஜனங்களுக்கு சத்தியத்தை சொல்லி வரும் கோபத்தை குறித்து மக்களை எச்சரிக்கைச் செய்யாமல், தெளிவற்ற சுவிசேஷத்தை பிரசங்கிக்கக் கூடிய ஒரு மனிதனை தேவன் அந்தக் கோபுரத்தின் மீது வைக்க மாட்டார். 45. அவர் அந்த கோபுரத்தின் மீது தீர்க்கமாகவும். தைரியமாகவும் நின்று. வரப்போகிறதான நியாயத் தீர்ப்பைக் காணக்கூடிய ஒரு ஆவியைப் பெற்ற ஒரு மனிதனையும், மக்கள் என்ன சொல்லிக் கொண்டிருந்தாலும் கவலை இல்லாமல் அவர்களுடையக் காரியங்களுக்கு விரோதமாகக் கூக்குரலிட்டு எப்படியாவது அவர்களை எச்சரிக்கைச் செய்யக்கூடிய ஒரு மனிதனைத் தான் அங்கே வைப்பார். அவர் தம்முடைய கோபுரத்தின் மீது குருட்டுத் தீர்க்கதரிசிகளை வைக்க மாட்டார். அவர் வருகின்றதான நியாயத்தீர்ப்பை முன் அறிந்து, அந்த கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ளும் படியாக, ஜனங்களை எச்சரிக்கைச் செய்யக் கூடிய தீர்க்கதரிசிகளையும், பிரசங்கிகளையும் தான் அங்கே வைப்பார். 46. இதே காரியம் தான் அங்கே நடந்தது. அந்த ஜாமக்காரன் "நான் புழுதி பறக்கிறதைப் பார்க்கிறேன்" என்று சொல்லி பகல் முழுவதும் ஜனங்களை எச்சரித்துக் கொண்டே இருந்தான்; "ஏன், ஒன்றுமில்லை. நாங்கள் எந்த புழுதியையும் பார்க்கவில்லையே", என்று அவர்கள் சொன்னார்கள். 47. "ஏன், நான் அறிவேன், அங்கே ஒரு சேனை வந்து கொண்டிருக்கிறது" என்று அவன் சொன்னான். ஆனால் அவர்களோ எப்பொழுதும் போல தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அதேக் காரியத்தைத் தான் இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனாகிலும் அவன் போதிய அளவு ஆவிக்குரியவனாகவும் பகுத்தறிதல் உள்ளவனாகவும் இருந்தால் நாம் முடிவில் இருக்கிறோம் என்பதைச் செய்தித்தாள்களை வாசித்து அவனால் அறிந்து கொள்ள முடியும். அந்த வேளை இங்கே இருக்கிறது. கர்த்தராகிய இயேசுவின் வருகையைத் தவிர வேறொன்றும் இங்கே நமக்கு மீந்திருக்கவில்லை. 48. சில மக்கள் வெளியே சென்று, அது ஒரு வேளை இன்றிலிருந்து ஒரு ஆயிரம் வருடம் கழித்து இருக்கலாம்" என்று சொல்லுகிறார்கள். 49. "நான் அதை விசுவாசிப்பதில்லை." நானோ இந்தச் சந்ததி கர்த்தராகிய இயேசுவின் வருகையைக் காணும் என்று விசுவாசிக்கிறேன். இந்தச் சந்ததி அதைக் காணவில்லை என்றால், நான் அதைத் தங்களுடையச் சந்ததியில் எதிர்பார்த்து இருக்கும் வாலிபப் பிள்ளைகளுக்கு பிரசங்கிக்க விரும்புகிறேன். அது இந்த சந்ததியில் சம்பவிக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் அங்கே அத்திமரமானது துளிர் விட்டு விட்டது, மேலும், "இந்தக் காரியங்கள் நிறைவேறுமளவும் இந்தச் சந்ததி ஒழிந்து போகாது" என்று இயேசு சொன்னார். இஸ்ரவேல் தான் முன்பிருந்த அதே நிலைக்கு மீண்டும் வந்திருக்கிறது. அது ஒரு தேசமாக மாறியுள்ளது. கடைசி நாட்களில் நடக்க வேண்டிய எல்லா அற்புதங்களும், அடையாளங்களும் இங்கே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. நாம் அந்தக் கோபுரத்தின் மீது நின்று, தேவன் உன்னை வைத்திருக்கிற அந்த உயர்ந்த இடத்திலிருந்து கூக்குரலிட்டு ஜனங் களைக் கூப்பிட்டு நீ எச்சரிக்கை செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் கடந்த காலங்களில் செய்தது போலவே ஊமையர்களைப் போல வாயை மூடி தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். 50. நவீன பியர்ல் துறைமுகத்தைப் (Pearl Harbor) போல, அவர்கள் எல்லாரும் அங்கே இருந்த பொழுது, நடனமாடிக் கொண்டு மற்றும் அது போன்ற காரியங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அவ்வாறு நடனமாடிக் கொண்டும், வாலிப பெண் பிள்ளைகள் உடைகளை களைந்து போட்டு தெருக்களினூடாக ஓடிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் இருந்த பொழுது திடீரென்று அங்கே ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. சத்துருவானவன் உள்ளே நுழைவதற்கு இரவு நேரத்திற்காக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் இரவில் வருவதற்குத் தான் விரும்புகிறான். இன்றைய அநேக இராணுவத் தாக்குதல்களும் இரவு நேரத்தில் தான் நடத்தப்படுகின்றன. மேலும், அதுதான்.... 51. கம்யூனிசத்தைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். கம்யூனிசம் ஒரு காரியத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. அதைக் குறித்து நாம் அதிகமாக இன்று கேள்விப் படுகிறோம். கம்யூனிசத்துக்கு ஒரு காரியம் தேவை, தேசமானது அதனால் நிறைந்திருக்கிறது. ஆனால், நாம் பெற்றிருக்கிற அந்த சிறிதளவு ஆவியும் மரித்து சபையில் அந்தகாரம் சூழும் வரை அது காத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒரு வழியில் தான் அது நம்மைத் தாக்க முடியும். தங்களை கிறிஸ்தவர்கள் என்று உரிமைக் கோரிக்கொள்ளும் அமெரிக்கர்கள் கர்த்தருடைய நாமத்தில் தங்கள் காலூன்றி நின்று கம்யூனிசத்திற்கு நம் தேசத்தில் இடமில்லை என்று அவர்கள் கூக்குரலிடட்டும். ஆனால், நாம் சரியாக அதற்குள்ளே தான் இருக்கிறோம். மேலும் நம்முடைய சபைகளிலும் அது நிறைந்திருக்கிறது. நிச்சயமாக, எல்லா இடங்களிலும். முழு காரியமும் மாசுப்படுத்தப்பட்டுவிட்டது. முழு சரீரமும் கெடுக்கப்பட்டு விட்டது. தெளிவான ஒரே ஒரு காரியம் தான் இருக்கிறது, ஒரே ஒரு அஸ்திபாரம் தான் இருக்கிறது. அதுதான் இயேசு கிறிஸ்து. நான் அறிந்த ஒரே இரட்சண்யக் கன்மலை இயேசு கிறிஸ்துவே. தப்பித்துக் கொள்வதற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்து மூலமாக மாத்திரமே. அவர் ஒருவரே வழி. 52. இப்பொழுது அந்த வேளையானது வந்து கொண்டிருக்கிறதை நாம் பார்க்கும் பொழுது, அது ஒரு விநோதமான காரியமாய் இருக்கிறது, திடீரென்று எந்த ஒரு எச்சரிப்பும் இல்லாமல் அவர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்கள் எச்சரிப்பைக் கண்டு கொள்ளாததால் பிடிக்கப் பட்டார்கள். ஜாமக்காரன் அவர்களை எச்சரிப்பின் மேல் எச்சரிப்பாக, எச்சரிப்பின் மேல் எச்சரிப்பு, எச்சரித்து கொண்டிருந்தும், அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளுக்குள் நுழைத்துக் கொண்டு, தங்களுடைய சுய இச்சைகளில் தொடர்ந்து அலைந்து திரிந்தார்கள். திடீரென்று, முழுவதும் இருட்டிய அந்த வேளையில் அன்னியர்கள் சரியாக உள்ளே புகுந்து விட்டனர். ஒரு இமைப்பொழுதிலே அவர்கள் எல்லாரும் வெட்டப்பட்டு முடிக்கப்பட்டனர். அன்றைய நேபுகாத்நேச்சார் நடத்திய தேநீர் அல்லது விஸ்கி விருந்து, இன்றைய பியர்ல் ஹார்பர் மற்றும் இதை போன்று நாம் கொண்டிருந்த அநேக குடிவெறியாட்டங்களின் போதெல்லாம் எதிரியா னவன் உட்புகுந்தான். 53. நாங்கள் ஒன்றும் குடித்திருக்கவில்லையே, என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் மதுபானத்தைக் குடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று இரவு நீங்கள் குடித்து வெறித்திருக்கிறக் காரியம் இந்த உலகத்தின் காரியமாய் இருக்கிறது. சபையானது இன்றைக்கு உலகத்தின் காரியங்களைக் குடித்து வெறிகொண்டு காணப்படுகிறது. அவர்கள் உலகத்தின் காரியங்களை நேரடியாக சபைக்குள்ளாக கொண்டு வருகிறார்கள். பங்க்கோ விருந்துகள், சீட்டு விளையாட்டுகள், நடனங்கள், இன்னும் சொல்லப் போனால் ராக் அண்ட் ரோல் இசையை ஒய். எம். சி. ஏ. விலும், சபைகளிலும் கற்பிக்கின்றனர். அது ஒரு அவமானம். 54. வரலாறு என்று ஒன்று இருக்குமென்றால் நான் இன்னுமாக அந்த வரலாற்றுக்குள்ளாக இறங்கிச் செல்வேன். ஒரு மத வெறியனாக, ஒரு பைத்தியக்காரனாக. ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளிலே நான் எழும்பி நின்று, "நான் வரப்போகிறக் கோபத்தைக் குறித்து மக்களை எச்சரிக்கைச் செய்தேன்" என்று சொல்லுவேன். மேலும் அது உங்கள் கையில் இருக்கிறது. அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். இந்த உலகமானது அணுகுண்டுகளின் கைகளுக்குள்ளாக நொறுங்கி விழு வதற்கு எவ்வளவாய் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால், சபையோ இந்தக் காரியங்களெல்லாம் சம்பவிப்பதற்கு முன்பாகவே அது போய்விட வேண்டும். கர்த்தருடைய வருகை எவ்வளவு நெருங்கி இருக்கிறது? 55. ஒரு விநோதமான காரியம், அது என்ன வென்றால், நம்முடைய கர்த்தர் அவர் இந்த பூமியில் இருந்த பொழுது அவர் தான் பரத்திற்கு ஏறிச் செல்வதை குறித்துப் பேசினதை காட்டிலும் தன்னுடைய இரண்டாவது வருகையைக் குறித்து அதிகமாக கற்பித்தார். வேத வசனங்களை வாசித்து, அவர் தன்னுடைய இரண்டாவது வருகையைக் குறித்து எவ்வளவாய் பேசினார் என்று பாருங்கள். எண்பது சதவீதத்திற்கும் அதிகமாக அவர் பேசியது அவருடைய இரண்டாவது வருகைக் குறித்து மாத்திரமே. அப்போது அவர் செய்து கொண்டிருந்ததைக் குறித்து அல்ல, அவர் பலியாக மரிக்க வேண்டியதைக் குறித்தும், அவர் பூமியை விட்டு பரலோகத்திற்கு ஏறி போகப்போவதைக் குறித்தும் பேசவில்லை. ஆனால், இரண்டாவது வருகையைக் குறித்து அதிகமாகப் பேசி, அவர் ஜனங்களை எச்சரித்துக் கொண்டிருந்தார். அவர் ஜனங்களுக்கு எச்சரிக்கைச் செய்ய பயந்ததில்லை. அவர் செய்த சில காரியங்களை நாம் பார்க்கலாம். 56. இயேசு அதைக் குறித்து அவ்வளவு அதிகமாகப் பேசியிருப்பார் என்றால், தம்முடைய நேரத்தில் எண்பது சதவீதத்தைத் தம்முடைய இரண்டாவது வருகையைக் குறித்துப் பேச எடுத்துக் கொண்டிருப்பார் என்றால், என்ன சம்பவிக்கும் என்று அவர் சொன்னதை நாமும் கேட்க வேண்டியது மிகவும் அவசியமாய் இருக்கிறது. அவர் சொன்னார், "தேசத்திற்கு விரோதமாக தேசமும், ராஜ்ஜியத்துக்கு விரோதமாக ராஜ்ஜியமும் எழும்பு வதையும், இது போன்ற எல்லாக் காரியங்களையும் கேள்விப்படுவீர்கள்" என்றார். மேலும், இந்த தேவாலயம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்படும். ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு முழுவதும் இடிக்கப்பட்டுப் போகும் என்றார். மேலும் அவர், "ஆனாலும் முடிவு உடனே வராது" என்று சொன்னார். மேலும், அவர் கடந்துச் சென்று காரியங்கள் எப்படி சம்பவிக்கும் என்று சொன்னார். மேலும் "சரியாகக் கடைசிக் காலத்தில் அந்த அத்திமரமானது துளிர் விடுவதையும், மற்றெல்லா மரங்களும் துளிர் விடுகிறதையும் நீங்கள் பார்க்கும் பொழுது வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிந்து கொள்ளுங்கள்" என்றார். அதேபோல, நீங்களும் இதைக் காண்கிறீர்கள், அதனால் அது வாசலுக்கு அருகே வந்துவிட்டது என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும் "இவைகள் நிறைவேறும் முன் இந்தச் சந்ததி ஒழிந்து போகாது என்று மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்" என்றார். 57. பாருங்கள், பாப்டிஸ்டுகள் ஒரு எழுப்புதலைப் பெற்றிருக்கிறார்கள், அது பில்லிகிரகாம். கத்தோலிக்கர்கள் ஒரு எழுப்புதலைப் பெற்றிருக்கிறார்கள். மேலும், மெத்தடிஸ்டுகள் ஒரு எழுப்புதலைப் பெற்றிருக்கிறார்கள். அவர் களில் சிலர், மேலும் சில பாப்டிஸ்டுகள் தங்கள் எழுப்புதலைப் பெற்றிருக்கிறார்கள். பெந்தேகொஸ்தே ஒரு எழுப்புதலைப் பெற்றிருக்கிறது. இன்னும் ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் அவரை போன்ற மகத்தான தேவ மனிதர்கள் எழுப்புதலை உண்டாக்கிக் கொண்டு கடந்து சென்றார்கள்; மேலும், இஸ்ரவேல் ஒரு எழுப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. தேவன் புறஜாதிகளோடு தனி நபராக இடைப்படுகிறார், இஸ்ரவேலோடு ஒரு தேசமாக இடைப்படுகிறார். 58. மேலும், இஸ்ரவேல் முதல் முறையாக இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எருசலேமில் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஓ ஜனங்களே, இது உங்கள் தலைக்கு மேல் சென்றுவிட இடம் கொடுக்காதீர்கள். அதுதான், அத்திமரம் துளிர் விடுகிற காரியம். இந்தச் சந்ததி... நாற்பது வருடம் என்பது ஒரு சந்ததி அல்லது தலைமுறை என்று சொல்லப்படுகிறது. அது ஏற்கனவே நீண்டகாலம் கடந்துச் சென்று விட்டது. பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு மேல். நாம் கடைசி சந்ததியில் இருக்கிறோம். 59. என்ன சம்பவிக்கும் என்று அவர் சொன்னதை கவனியுங்கள். நோவாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் பெண் கொண்டும், பெண் கொடுத்துக் கொண்டும் இருப்பார்கள். அந்த ரீனோ, நிவாதாஸ் மற்றும் அனைத்து இடங்களையும் கவனியுங்கள். ஊழியங்களைக் கூட கவனியுங்கள். ஒரு மனைவியை விட்டுவிட்டு, டீக்கனுடைய மனைவியையும் மற்ற விசுவாசியுடைய மனைவியையும் திருமணம் செய்து கொள்வது. பழைய மனைவியிடம் திரும்பிப் போவதும் வருவதுமாய் இருப்பது. இது போன்றக் காரியங்களைச் சபைகளில் அனுமதிப்பது. ஓ, ஜனங்களே எச்சரிக்கை அடையுங்கள். அவர்கள் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம். எச்சரிக்கப்பட்ட விதமாகவே அந்த நேரம் வரும். சபையானது துணிகரம் உள்ளதாயும், இறுமாப்புள்ளதாயும், தேவப்பிரியராய் இராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறுச் செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்தும் இருக்கும். (சபைக்குச் செல்வது என்ற தேவபக்தியின் வேஷத்தைக் கொண்டிருக்கும்). 60. நான் எந்த ஒரு சபையையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நாம் ஒவ்வொருவருமே குற்றவாளிகளாய் இருக்கிறோம். பெந்தெகொஸ்தே குற்றவாளியாய் இருக்கிறது. பிரஸ்பிட்டேரியன்கள் குற்றவாளிகளாய் ருக்கிறார்கள். பாப்டிஸ்டுகள் குற்றமுடையவர்களாய் இருக்கிறார்கள். எல்லாருமே குற்றவாளிகள். நாம் எல்லாரும் பாவம் செய்து தேவமகிமை அற்றவர்களானோம். முற்றிலும் சரி. 61. ஒரு சில இரவுகள், சுமார் இரண்டு இரவுகளுக்கு முன்பு நான் இங்கே வருவதற்கு முன்பாக என்று நினைக்கிறேன், அங்கிருக்கிற சகோதரன் லியோ என்னை அழைத்து, அல்லது என்னிடம் வந்துச் சொன்னார், "சீக்கிரமாக உங்கள் தாயாரின் வீட்டிற்கு இறங்கிச் சென்று அந்த வானொலியை திருகிப் பாருங்கள்." இந்தியானாவில் இருக்கிற அந்த மெத்தடிஸ்ட் சபை, அந்த மிகப்பெரிய மெத்தடிஸ்ட் சபை தொலைக்காட்சியில் ராக் அண்ட் ரோல் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும், அவர்கள் தங்கள் கழுத்தில் தொங்கும் சிலுவைச் சொரூபத்தை தங்கள் உடைக்குள் மூடி மறைத்து, அந்த ஊழியக்காரன் தன்னுடைய மேல் அங்கியின் காலரை திருப்பி அணிந்து கொண்ட அந்த கொடுமையை என்னுடைய சொந்தக் கண்ணால் நான் கண்டேன். மேலும், அந்தப் பத்திரிகையாளன் அவரிடத்தில் பேட்டி கண்ட பொழுது "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். 62. அதற்கு அவர், "மெத்தடிஸ்ட் சபை நீண்ட காலமாக இந்த அருமையான கலையாகிய ராக் அண்ட் ரோலை மறந்து விட்டது. ஒருபொழுதும் இதைத் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது" என்று சொன்னார். 63. ஓ, என்ன ஒரு அவமானம்! ஜான் வெஸ்லிக்கு இது தெரிந்தால் அவர் கல்லறைக்குள் உருண்டு புரண்டு படுத்திருப்பார். அந்த பரிசுத்தமாக்கப்பட்ட தாய்மார் களும் தந்தைமார்களும் தங்கள் உடையிலும், வாழ்விலும் பரிசுத்தவான்களை போல நடந்து கொண்டார்கள். நீங்களோ மிகவும் கீழ்த்தரமாகச் சென்று பெரிய அவ கீர்த்தியை ஏற்படுத்திவிட்டீர்கள். அது மாத்திரமல்ல, பாப்டிஸ்டுகளும், பெந்தெகொஸ்தேக்களும், மேலும் நாம் எல்லாருமே அந்த குற்றத்திற்கு ஆளாகி இருக்கிறோம். என்ன ஒரு அவ கீர்த்தி. இப்படித்தான் இந்த கடைசி நாட்களில் நடக்கும் என்று இயேசு சொன்னார். 64. இன்னொரு காரியத்தையும் அவர் சொன்னார், அது "பல்வேறு இடங்களில் பூமியதிர்ச்சிகள் உண்டாகும்" என்பதாகும். நான் உங்களுடைய நேற்றைய பீனிக்ஸ் செய்தித்தாளில் படித்தேன், என்று நினைக்கிறேன். அங்கே ஆயிரக்கணக்கானவர்கள் மரித்தார்கள். "அலைகள் முழக்கமாயிருக்கும். பயங்கரங்கள் தோன்றும்" அந்த ஆழிப்பேரலைகளை நோக்கிப் பாருங் கள், அது என்னச் செய்தது என்று. சமீபத்தில் சிக்கா கோவில், நீச்சல் உடை அழகிகள் அந்த கடற்கரையில் நின்று கொண்டிருந்த பொழுது பெரிய அலை எழும்பி அவர்களை எல்லாம் கடலுக்குள் இழுத்துக் கொண்டுச் சென்று விட்டது. அது எங்கிருந்து வந்தது என்று இன்னும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை பூமி அதிர்ச்சிகள் உண்டாகின்றன என்று சொல்லப்பட்டது. ஆனால், அது எனக்கு மறந்து விட்டது. அது எல்லா நேரமும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. ஏன்? பழமையான இந்த பூமியின் மேலோடு மெலிதாகிக் கொண்டே போகிறது. கர்த்தருடைய வருகை சமீபமாய் இருக்கிறது. தேவன் நியாயத்தீர்ப்புகளை உரைத் திருக்கிறார். அவர் சொன்னார், ஜனங்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்து அவர்கள் விழுந்து போவார்கள். மேலும், காரிருள் பூமியை மூடும் என்று உரைத்தார். ஆவிக்குரிய இருளானது பூமியை மூடும்பொழுது அதுதான் சத்துருவானவன் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற நேரமாய் இருக்கிறது. நாம் அந்த காரிருள் மணி வேளையில் தான் இருக்கிறோம். 65. இப்பொழுது, கவனியுங்கள். இதுதான் நேரம். சம்பவிக்கும் என்று இயேசு சொன்ன காரியங்கள் சம்பவிக்கிறதை நாம் காணும் பொழுது, அவரை நோக்கிப் பாருங்கள். கடந்த இரவு நான் மேற்கோளிட்டது போல அவர் என்னச் சொல்கிறார் என்று பாருங்கள். "சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களிலும் நடக்கும்" என்றார். சோதோமின் அழிவுக்குச் சற்று முன்பாக ஆபிரகாம், அதாவது சபையானது வெளியே அழைக்கப்பட்டது. ஆவிக்குரிய காரியம். நான் அதை மறுபடியும் மேற்கோளிடுகிறேன்., இங்கேயும் அவர்கள் தங்களை வேறுபிரித்துக் கொண்டு கடினமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் தேவனை முதலில் வைத்து தேவனோடு சரியாக இருந்தனர். லோத்து கொஞ்சக் காலம் பாவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். இன்றைக்கு பெரும் பாலானவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு காரியங்களை செய்வது போல. "நீங்கள் உலகத்திலும், உலகத்தில் உள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால் உங்களிடத்தில் தேவ அன்பு இல்லை" என்று வேத வசனம் சொல்லுகிறது. 66. இந்தக் காரியங்கள் எல்லாம் சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. நாம் அவைகளைப் பெற்றிருக் கிறோம்; அவைகள் இப்பொழுது இங்கே இருக்கிறது. அப்படிப்பட்டவைகளை நாம் அனுதினமும் பார்க்கிறோம். இன்று இரவு வெளியே தெருவிலே இறங்கி சென்று பாருங்கள், இன்று இரவில் கூட நீங்கள் அவைகளைக் காணலாம். ஏன்? அது அவ்வளவு சாதாரணமாகி விட்டது. சுவற்றின் மேல் கையெழுத்து காணப்படுகிறது. அது தெருக்களிலும், வானத்திலும் மற்றும் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது. முடிவு இங்கே வந்திருக்கிறது. நாம் முடிவின் நேரத்தில் இருக்கிறோம். நண்பர்களே, வஞ்சிக்கப்படாதீர்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். 67. அதன் பின்பு இந்த பயங்கரமான காட்சிகள் வருவதையும் நாம் பார்க்கிறோம்: பூமியதிர்ச்சிகள், ஆழிப்பேரலைகள், விழுந்துபோதல், காரிருள், துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், சுகபோகப் பிரியர்கள் போன்றவைகள். இப்பொழுது இந்த உலகத்தின் நிலை அவ்வளவு தான். இந்த உலகமும் அதைத்தான் குறி வைத்திருக்கிறது. ஆனால், சபைக்கோ வேறொரு அடையாளம் இருக்கிறது. ஓ, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட, வெளியே அழைக்கப்பட்ட அடையாளம். அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதாவது ஒரு பின்மாரி சபையில் இருக்கும் என்று. அந்த ஆவிக்குரிய சபையில் கடைசி நாட்களில் அவர் முன்மாரியையும், பின்மாரியையும் ஊற்றுவார். நினைவு கூருங்கள், முன்மாரி முதலில் வருகிறது; பின்மாரி இரண்டாவதாக வருகிறது. முன்மாரியும், பின்மாரியும் இரண்டும் ஒரே காலத்தில் வரும், அவர் அதை வாக்குதத்தம் செய்திருக்கிறார். இப்பொழுது, அந்த மாரிகள் என்னவாய் இருக் கின்றன என்று நாம் கவனிக்கலாம். 68. இப்பொழுது, தேவனுடைய தீர்க்கதரிசி "இதோ ஒரு நாள் உண்டு, அது பகலும் அல்ல, இரவும் அல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்" என்று சொல்லியிருப்பதை நாம் காண்கிறோம். அது எப்படிப்பட்ட வெளிச்சம்? காலையில் கிழக்கில் உதிக்க ஆரம்பித்த பொழுது பிரகாசித்த அதே சூரிய வெளிச்சம் தான் கடைசி நாளிலும் மேற்கில் பிரகாசிக்கும். நாளின் கடைசி மணி நேரத்தில், குமாரன் அங்கே பிரகாசிப்பார், கு மா- ர- ன் (S-o-n) அங்கே பிரகாசிப்பார். 69. இப்பொழுது நமக்கு ஒரு நேரம் உண்டாகி இருந்தது. நமக்கு ஒரு சிறு சாயங்கால வெளிச்சம் உண்டாகி இருந்தது. ஆனால் அந்த ஒழுங்கை கவனியுங்கள். விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபோது அவன் பரிபூரணமான வேத வசனத்தின் ஒழுங்கில் இருந்தான். "நீங்கள் கவனித்தீர்களா? விடியற்காலமும் வருகிறது, இராக்காலமும் வருகிறது" ஜாமக்காரனே இரவு எவ்வளவு சென்றது? 70. கடைசி நாட்களில் இப்படிப்பட்ட காரியங்கள் சம்பவிக்கும் என்று இயேசு சொன்ன காரியங்கள் நிறைவேறுகிறதை நாம் காணும் பொழுது, அவர் இந்த கடைசி சந்ததியை முன்னறிந்துச் சொன்னார். நாம் அதை தத்ரூபமாகப் பார்க்கிறோம். இஸ்ரவேல் தத்ரூபமாய் இருக்கிறது. அடையாளங்கள் தத்ரூபமாக இருக்கிறது. உலகம் முழுகிக் கொண்டிருக்கிறது. அணுகுண்டு யுகம். மேலும் அதுதான் இந்த யுகத்தின் முடிவு. காலத்தின் முடிவு, மேலும் அந்த கையெழுத்துக்களை நாம் எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். அது நம்மை "ஜாமக்காரனே இரவு எவ்வளவு சென்றது?" என்று கூப்பிட்டு கேட்கும் படிச் செய்கிறது. 71. நமக்கு ஒரு ஜாமக்காரன் இருக்கிறார். மகிமையின் பாதுகாப்பு அரண்மீது ஏறி நின்றிருக்கிற ஒரு ஜாமக்காரன் நமக்கு இருக்கிறார். தேவனை விசுவாசிக்கப் போகிற மனிதர்களுக்குள்ளும், ஸ்திரீகளுக்குள்ளும் அந்தக் கோபுரத்தை அமைத்துக் கொள்ள பரிசுத்த ஆவியானவர் திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் தான் அந்த ஜாமக்காரன். நம் எல்லோர் மீதும் ஜாமம் காக்கும்படி ஜாமக்காரனாக அனுப்பப்பட்ட அந்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு இருக்கிறார். அவர் நம்முடைய பாதுகாவலர். பரிசுத்த ஆவியானவர் தான் மனிதனை வழி நடத்தும்படியாகவும், நம்முடைய ஆத்துமாக்களுக்கான ஜாமக்காரனாகவும் அனுப்பப் பட்டிருக்கிறார். அதுதான் முற்றிலும் சரி. மனிதர் ஒருவரை ஒருவர் காவல் காக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் தான் நம்மீது காவல் காக்கிறவர். அவர் நம்முடைய போதகர், நம்முடைய உபாத்தியாயர்; பரிசுத்த ஆவி தான் போதிப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். இந்தக் காரியங்களை எல்லாம் நாம் பார்க்கும் பொழுது, அந்த பரிசுத்த ஆவியானவரை நோக்கி, "ஜாமக்காரனே இரவு எவ்வளவு சென்றது?" என்று நாம் கூப்பிடலாம். 72. அவர் இங்கே சொன்ன வண்ணமாகவே உங்களுக்குச் சொல்லுவார், "விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது" 73. அது என்ன? அது இப்பொழுது எப்படி சம்பவிக்கிறது என்று பாருங்கள். இப்பொழுது, அவன் இயற்கையான மனிதர்களிடம் அவர்களால் எதை பார்க்க முடிகிறது என்று கேட்டான். இப்பொழுது, கடைசி நாட்களில் ஒரு பின்மாரி இருக்கும் என்று அவர் சபைக்குச் சொல்லுகிறார். மேலும், நமக்கு ஒரு பின்மாரி இருந்தது. நினைவில் கொள்ளுங்கள், ஆனால்... அதன் பிறகு என்ன சம்பவித்தது? முதலாவது பொழுது விடிய ஆரம்பிக்கிறது. அதன் பிறகு - பொழுது விடிவதற்கு முன்பாக அது இருண்டு போய் முழுவதும் இருளாக இருக்கிறது. அதன் பிறகு அங்கே பொழுது விடிகிறது இப்பொழுது நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? காலையிலே கவனியுங்கள்; அங்கே பொழுது விடியும், அதன் பிறகு அது முழுவதும் இருளாகும், மறுபடியும் அங்கே பொழுது விடியும். ஆனால் முதலாவது அது பகல், விடியற்காலை அதன்பிறகு இரவு, மேலும் அதன் பிறகு பொழுது விடிதல். 74. இப்பொழுது, அவன் என்ன சொன்னான் என்று கவனியுங்கள், "விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது."இருள், பகலுக்கு முன்பாக வரும் ஒரு சிறிய இருள், அந்த நேரத்தில் என்ன சம்பவிக்கிறது? அந்த முதல் சிறிய வெளிச்சத்தைத் தான் நாம் பெற்றிருந்தோம். நாம் அந்த வெளிச்சத்திற்குள் பிரவேசித்தோம். நாம் அந்த அடையாளங்களை இங்கேப் பார்க்கிறோம், அது பூமிக்குரிய அடையாளங்கள். அங்கே எல்லா விதமான காரியங்களும் சம்பவிக்கின்றன: பூமியதிர்ச்சிகள், ஜனங்கள் வழிவிலகிப் போகுதல், மேலும் - மேலும் பெண்களும், ஆண்களும் நெறி கெட்டவர்களாகி எப்படி நடந்து கொள்கிறார்கள். எப்படியாக, பெண்கள் ஆண்களைப் போல தங்களை தாறுமாறாக்கிக் கொள்கிறார்கள், ஆண்கள் பெண்களைப் போல தங்களை தாறுமாறாக்கிக் கொள்கிறார்கள். இருவரும் உடைகளை மாற்றி அணிந்து கொள்கிறார்கள். ஆனால், ஆண் உடையை பெண் தரிப்பது என்பது மகா அருவருப்பு என்று வேதம் கூறுகிறது. இந்த எல்லாக் காரியங்களிலும் அவர்கள் தங்கள் கண்களை எவ்வளவு அகலமாய் திறக்க முடியுமோ அவ்வளவு அகலமாய் திறந்து கொண்டு நடந்து சென்று, அவர்கள் காரிருளிலே தடுமாறுகிறார்கள். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளுகிற மக்கள், ஆண்களும், பெண்களும் சிகரெட்டுகளை புகைத்துக் கொண்டு, மது அருந்திக் கொண்டு, மது விருந்துகளுக்குச் சென்று குட்டைக் கால் சட்டைகளை அணிந்து கொண்டு, தங்கள் தலைமயிர்களை கத்தரித்துக் கொண்டு, முகச்சாயமும், நகச்சாயமும் பூசிக்கொண்டு. இன்னும் வேறு என்னவெல்லாமோ அந்த முகத்தில் பூசிக்கொண்டு, அப்படியாக நடந்துச் செல்கிறார்கள். அதுதான் உண்மை. 75. மேலும், நீங்கள் அவர்களை நோக்கிக் கூச்சலிட்டு அலறினாலும், அவர்கள் "சகோதரன் பிரன்ஹாம் நீங்கள் ஒரு நமுத்து போன ஆள்", என்று சொல்கிறார்கள். 76. ஒரு நாளில் நீங்கள் இதை நினைவு கூருவீர்கள். செவிகொடுங்கள். தேவன் தம்முடைய ஜாமக் கோபுரத்தை அமைக்கிறார். அவர் அதன் மீது ஒருவரை நிறுத்துகிறார். உங்கள் போதகர் அதற்கு எதிராகக் கூக்குரலிடுவார். உங்களுடைய பூரண சுவிசேஷ மனிதர்கள் அல்லது ஒரு பாப்டிஸ்டு அல்லது ஒரு பிரஸ்பிட்டேரியன் அல்லது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட யாராய் இருந்தாலும் அதற்கு விரோதமாகக் கூக்குரலிடுவார்கள். அது யாரானாலும் கவலையில்லை, அவர் ஒரு தேவ மனிதனாய் அவருடைய ஆவி பரிசுத்த ஆவியைப் போலவே இருக்குமாயின், ஏனென்றால் அது பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாய் இருக்கிறது. மேலும் அந்த பரிசுத்த ஆவியானவரே இந்த வார்த்தையை எழுதியவர். மேலும் அதே பரிசுத்த ஆவி அந்த வார்த்தையை உறுதிப்படுத்துவார். நிச்சயமாக, அவர் வாக்குத்தத்தம் பண்ணின ஒவ்வொன்றையும் அவர் பார்த்துக் கொள்ளுகிறவாராய் இருக்கிறார். அது அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம்; நாம் கடைசி மணி நேரத்தில் இருக்கிறோம். 77. கவனியுங்கள், விடியற்காலம் வருகிறது, இராக் காலமும் வருகிறது. இப்பொழுது, பூரண சுவிசேஷ மக்கள் மத்தியிலே நமக்கு ஒரு மகத்தான எழுப்புதல் உண்டாயிருந்தது. அது ஒரு மகத்தானக் காரியமாய் இருந்தது. அங்கே சுகமளித்தல்கள் நடைபெற்றதையும், மேலும் அற்புதங்களையும் அடையாளங்களையும் நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இப்பொழுது நினைவு கூறுங்கள், அவர் சொன்னார், "விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது", இப்பொழுது அது மறுபடியும் இருட்ட ஆரம்பிக்கிறது. 78. நான் ஒரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக இங்கே இருந்தேன். ஏன், நம்மால் அந்த ஜனங்களை இந்த பக்கத்தில் எங்குமே பிடித்து வைக்க முடியவில்லை. எல்லாருமே எல்லா இடங்களிலுமிருந்து வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் தான் திருமதி. வால்ட்ரோப் அதோ அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். (நல்லது, நான் நினைக்கிறேன், அது திருமதி. வால்ட்ரோப் தான் என்று! சரியாக அங்கே அந்த விளக்கின் கீழாக அமர்ந்திருக்கிறார்கள். என்னால் வெறுமனே அங்கே ஒரு உருவம் அல்லது அதுபோல இருக்கிறதைத் தான் பார்க்க முடிகிறது, ஆனால் சரியாகப் பார்க்க முடியவில்லை.) மரணத்திலிருந்து திருப்பிக் கொண்டு வரப்பட்டார்கள். நான் நினைக்கிறேன், அவளுடைய நுரையீரல் அல்லது இருதயத்தில் புற்றுநோய் அல்லது வேறு எதுவோ இருந்தது. மகத்தான அற்புதங்களும், அடையாளங்களும் சம்பவித்தன. மேலும் நாம் இங்கே சகோதரன் கார்சியா அவருடன் இருந்த பொழுதும் இன்னும் பல்வேறு இடங்களிலும், அந்தப் பள்ளிக்கூட விடுதிகள், போன்ற எல்லா இடங்களிலும், ஜனங்கள் அப்படியே முண்டியடித்துக் கொண்டு அவர் களை சமாளிக்க முடியாத அளவில் நின்று கொண்டிருந்தனர், இந்த இடமே போதாததாய் இருந்தது. 79. இப்பொழுது, நான் அதை என் சகோதரன் ராபர்ட்ஸ்ஸிடத்தில் பார்க்கிறேன், சகோதரன் ஹிக்ஸ்ஸி டத்திலும் மற்றும் மகத்தான மற்ற பெரிய மனிதர்களி டத்தில் அதைப் பார்க்கிறேன். அதே நேரத்தில் அது சரிந்து கொண்டே போவதையும் நான் பார்க்கிறேன். உங்களால் ஜனங்களை வெளியே கொண்டு வர முடியாது, அப்படியேக் கொண்டு வந்தாலும், இருபது நிமிடத்திற்கு மேல் அவர்களுக்கு நீங்கள் பிரசங்கம் செய்தால் அவர்கள் அதைக் குறித்து நொந்து கொள்கிறார்கள். அவர்கள் திரும்பி போய் விடுகிறார்கள். அங்கே ஏதோ தவறு இருக்கிறது. அது என்ன? அலாரம் அணைக்கப்படுகிறது. அலாரம் அடிக்கிறது நீங்கள் புரண்டு படுத்து அந்த அலாரத்தை அணைத்து விடுகிறீர்கள். நீங்கள் இன்னும் சிறிது நேரம் தூங்க விரும்புகிறீர்கள். "விடியற்காலம் வருகிறது, ஆனால் இராக்காலம் முதலில் வருகிறது." அலாரத்தை நிறுத்தாதே; அந்த அலாரம் அடிக்கட்டும். நீ காலூன்றி எழுந்து நில்; இது எழுந்திருக்க வேண்டிய வேளை ஆயிற்று 80. பிரசங்கிகள் தேவனுடைய வருகையைக் குறித்தும், தேவனுடைய குமாரனுடைய வருகையைக் குறித்தும் உன்னை எச்சரிக்கைச் செய்யும் பொழுது உன் அலாரத்தை அணைத்து விடாதே. அதை அமுக்கிப் போடப் பார்க்காதே. உலகத்திற்குள் திரும்பிப்போய் நான் கொஞ்சம் ஓட்ஸ் விதைக்க வேண்டி இருக்கிறது என்று சொல்லாதே. முப்பத்தைந்து வயது மனிதனே, இளம் வயதினரே, அப்படிச் செய்ய முயற்சிக்காதே. உன் காலூன்றி நில். அந்த அலாரத்தை அடிக்க விடு, அது வந்து கொண்டிருக்கிறதான தேவக்கோபத்திற்கு தப்பித்துக் கொள்வதற்கான தேவனுடைய பரிசுத்த ஆவியின் எச்சரிக்கையாய் இருக்கிறது. வியாதியஸ்தர்கள் சுகமாகிறதையும், குருடர்களுடைய கண்கள் திறக்கப்படுகிறதையும், செவிடர்களுடைய காதுகள் கேட்கிறதையும் நீ காணும் பொழுது, எச்சரிக்கையாய் இரு. 81. ஓ, அதோடு கூட நாம் ஏராளமான மதவெறியும், கொண்டிருந்தோம். அது எப்பொழுதும் அப்படியாகத் தான் இருக்கிறது. இதுவரை நடந்த ஒவ்வொரு கூட்டங் களிலும் அப்படியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அது எப்பொழுதுமே நமக்கு இருக்கிறது. அதைப் பாருங்கள்... நான் சமீபத்தில் மார்ட்டின் லூத்தரை குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால், மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க சபையை எப்படி எதிர்த்து வெற்றி கண்டார் என்பது ஒரு பெரிய ஆச்சரியம் அல்ல. ஆனால், அங்கே பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்த எழுப்புதலைத் தொடர்ந்து தோன்றும் அநேக மதவெறிக் கொள்கைகளை எல்லாம் பின்பற்றி சமாளித்து வரத் தன் தலையை மேலே உயர்த்தி, அதை விட்டு வெளியே அவரால் வர முடிந்ததே ஆகும். 82. அதுதான் காரியம். உங்கள் சிந்தையைக் கிறிஸ்துவின் மேலும், உங்கள் கண்களைக் கல்வாரியின் மேல் வைத்து, முன்னேறிச், செல்லுங்கள். எதுவும் உங்களைப் படுக்கையில் இழுத்துப் பிடித்து உறங்க வைக்க வேண்டாம். சொல்லுங்கள், "ஓ, நல்லது, இங்கே பாருங்கள், இப்படி ஆகிவிட்டது, அப்படி ஆகிவிட்டது", என்று ஆவியைப் பகுத்தறியப் பார்க்காதீர்கள். உங்களுடைய அலாரத்தை அணைத்துப் போடாதீர்கள். அதற்குச் செவிக் கொடுங்கள். 83.மேலும், விடியற்காலத்துக்கு சற்று முன்பாக என்ன நடந்தது என்று? நினைவு கூருங்கள். இராக்காலம் வரும்பொழுது, அங்கே விடிவெள்ளி நட்சத்திரம் வருகிறது. வானத்திலேயே மிகவும் பிரகாசமுள்ள நட்சத்திரம் அந்த விடிவெள்ளி நட்சத்திரம் தான். ஓ, இப்பொழுது இதைத் தவற விட்டு விடாதீர்கள். அந்த விடிவெள்ளி நட்சத்திரமானது அந்தச் சிறிய வெளிச்சத் திற்கும், உண்மையான பொழுது விடிதலுக்கும் இடையில் வருகிறது. அந்த விடிவெள்ளி நட்சத்திரம் மிகுந்த காரிருள் ஆனவுடன் விடிவதற்குச் சற்று முன்னதாக, தன்னுடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அது வந்து கொண்டிருக்கிறதான சூரியனுடைய வெளிச்சத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்களா, எது அதைச் செய்கிறது...? 84. விஞ்ஞானம் சொல்லுகிறது அது ஏன் அந்த அளவுக்கு இருட்டாகிறது என்றால் வருகிறதான அந்த வெளிச்சமானது இருளைப் பிடித்து தள்ளிக் கொண்டு வருகிறது. அது எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக உறையச் செய்கிறது. அதுதான் அதை அவ்வளவு இருட்டாக்குகிறது. அதன் பின்னால் தான் வெளிச்சம் வந்து கொண்டிருக்கிறது. யார் உலகத்தின் ஒளியாய் இருக்கிறார்? இயேசு. ஓ, ஏதோ ஒரு புதிய ஐ நா (UN) அல்லது இந்த உலகத்தினுடைய திட்டங்களோ இல்லை, அதிலிருந்து உன்னுடைய சிந்தையை விலக்கு. இயேசுவின் வருகையின் மேல் உன் சிந்தையை பொருத்து. அது என்ன? அதுதான் விடிவெள்ளி நட்சத்திரம். 85. நாம் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு செல் வோம். இயேசுவே கூறியது, "ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ, அவனுக்கு விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்" வேதம் அப்படிச் சொல்லுகிறது. அது என்ன? ஒரு ஜெயம்கொள்ளுகிறவன், உலகத்தை ஜெயிக்கிற ஒருவன், சுயத்தையும்; பெருமையையும் ஜெயிக்கிறான். "நான் அவனை விடிவெள்ளி நட்சத் திரமாக ஆக்குவேன்", அது என்ன செய்கிறது? நான் அவனை பிரகாசிக்கச் செய்து அங்கே உயரத்தில் வைப்பேன். வந்து கொண்டிருக்கிற என்னுடைய வல்லமையின் மூலம் என்னுடைய சொந்த பிரசன்னத்தை அவனுக்குள் வைத்து இருளுக்குள்ளாக பிரதிபலிக்கச் செய்வேன், அல்லேலூயா, "ஜெயம் கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு நான் விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்." விடிவெள்ளி நட்சத்திரம் எதற்காக அங்கே வைக்கப்பட்டிருக்கிறது? அது வந்து கொண்டிருக்கிற சூரியனுடைய வெளிச்சத்தைப் பிரதிபலித்துக் காண்பிக்க வேண்டும். 86. விடிவெள்ளி நட்சத்திரம் என்பது என்ன? அதற்கு எதிராக சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதா? அது வந்து கொண்டிருக்கிற சூரியனுடைய வெளிச்சத்தை, அதனுடைய பிரசன்னத்தைப் பிரதிபலிக் கிறது. அதுதான் வானத்தில் இருக்கிற மிகவும் பிரகாசமான காரியம். அந்த வானத்தில் இருக்கிற மிகவும் பிரகாசமான காரியம் அது இன்றைக்கு இருக்க வேண்டும். அது இன்றைக்கு இருக்கிறது. அந்த ஊழியக்காரன் அல்லது அந்தக் கிறிஸ்தவன் அல்லது ஆவியினால் நிரப்பப்பட்ட அந்த மனிதன், அதாவது அவன் உலகத்தையும் மற்ற எல்லாவற்றையும் விட்டு விடும் அளவுக்கு முழுவதும் பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட்டிருப்பான். மேலும், தேவனும் அவருடைய வெளிச்சத்தை அவனில் பிரதிபலிக்கச் செய்வது. அவன் மூலமாக கு-மா-ர-னுடைய வருகை நெருங்கி வந்திருக்கிறது என்ற எச்சரிப்பை உலகத்திற்குக் கொடுக்கிறார். ஓ, என்ன ஒரு மணி வேளை இது! 87. முடிக்கிறதான வேளையில், நான் இதைச் சொல் லட்டும்: "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?" விடிவெள்ளி நட்சத்திரம் அதைப் பிரதிபலிக்கும். அந்த விடிவெள்ளி நட்சத்திரம் அந்தச் சூரியனை பிரதிபலிக்கும். இப்பொழுது, விடிவெள்ளி நட்சத்திரங்களே, நான் உங்கள் ஒவ்வொருவரையும் நோக்கிக் கூப்பிடுகிறேன். உங்கள் விளக்குகளை அணைத்து விடாதீர்கள்; உங்கள் எச்சரிப்பு மணியை நிறுத்தி விடாதீர்கள். விடிவெள்ளி விடிவெள்ளி நட்சத்திரங்களே, உலகக் காரியங்களால் நீங்கள் ஒரு வேளை அழுக்கடைந்து கொண்டும், உங்கள் கண்கள் மங்கலாகிக் கொண்டும் போகும் என்றால், உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள். தேவகுமாரன், அவருடைய வருகையில் நீங்கள் அவருடைய பிரசன்னத்தை பிரதிபலிக்கத் தக்கதாகப் பாவத்தை உங்கள் ஜீவியத்திலிருந்து எடுத்துப்போட்டு, அவிசுவாசத்தை உங்களை விட்டு அகற்றிப் போடுங்கள். விடிவெள்ளி நட்சத்திரங்களே, நீங்கள் எல்லாரும் உங்கள் அயலகத்தாரிடம் இயேசுவைப் பிரதிபலியுங்கள். 88. அவருடைய ஜாமக்காரர்களில் ஒருவனாக, அவர் என்னை இந்த ஜாமக் கோபுரத்தின் மீது ஒருவனாக வைத்திருக்கிறபடியால், நான் இன்று இரவு இதை உங்களுக்குச் சொல்கிறேன்: வந்து கொண்டிருக்கிறதான குமாரன் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். அவருடைய வருகையைப் பிரதிபலியுங்கள்.... 89. அவர் எனக்கு தந்திருக்கிறதான இந்தச் சிறிய ஊட ழியம்... சோதோமுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம் என்ன? அந்தத் தூதன் கூடாரத்தின் பக்கமாக முதுகைத் திருப்பி வைத்துக் கொண்டு உள்ளே சாராள் என்னச் செய்து கொண்டிருக்கிறாள் என்று சொன்னாரே அது என்ன? இஸ்ரவேலுக்கும், சோதோமுக்குமான கடைசி அடையாளம் என்னவாய் இருந்தது? சமாரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம் என்னவாக இருந்தது? அவர் புறஜாதியாரோடு கூட இருந்ததில்லை. புறஜாதியார் ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை. இப்பொழுதோ இரண்டாயிர வருட உபதேசம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. காரியம் என்ன? பின்மாரியும் முன்மாரியும் சேர்ந்து வந்து கொண்டிருக்கிறது. விடியற்காலத்து நட்சத்திரங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மெருகேற்றப்பட்டு வருகின்றனர். 90. இன்று காலை எங்கோ ஒரு இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் நான் இப்படியாகக் கேள்விப்பட்டேன்; (நான் எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து ஏதோ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.) அங்கே ஒரு பெண் சில மணிகளை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தாள். (நீங்கள் அதைக் கேள்விப்பட்டிருக்கலாம். அது தொலைக்காட்சியில் காண் பிக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். நான் அதைக் கேட்டேன்; ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை.) ஆனால் அங்கே அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் பலவிதமான மணிகளை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தாள். ஓ, ஓ, வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட அந்த மணிகளை ஒலிக்கச் செய்வதை அவர்கள் ஒரு நிகழ்ச்சியாக நடத்திக் கொண்டிருந்தனர். மேலும் ஒரு மணி மிகவும் தெள்ளத் தெளிவாக ஒலித்தது; அவள், "அது மனித இரத்தத்தை கொண்டு தயாரிக்கப்பட்டது" என்று சொன்னாள். அந்த மணி, ஓ, என் சகோதரனே! அது அவ்வளவு அழகாக ஒலித்தது. இன்றைக்கும் கூட ஒருவேளை அந்த சுவிசேஷ ஒலியை ஒலிக்கக் கூடிய ஏதாகிலும் ஒன்று இருக்கும் என்றால், அதுதான் இயேசு கிறிஸ்துவின் இரத்தம். அதுதான் தேவனுடைய குமாரனுடைய வருகையின் வெளிச்சத்தை உங்களுக்கு பிரகாசிக்கச் செய்யும் சுவிசேஷ மணியோசையாய் இருக்கிறது. 91. பரிசுத்த ஆவியின் ஊழியத்தைக் கவனியுங்கள். அது திரும்பி வரும்பொழுது, அதை இன்றைக்குக் கவனியுங்கள்.... சபையானது மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருகிறது. அப்பொழுது... முதல் சீர்திருத்தம் லூத்தராய் இருந்தார். அப்பொழுது நமக்கு நல்ல விஸ்தாரமான இடம் உண்டாகி இருந்தது. அது விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான், என்பதே. பின், சபையானது அசைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கே வெஸ்லி வந்தார். அது இரண்டாவது பெரிய எழுப்புதல் ஆகும். அது பரிசுத்தமாக்கப்படுதலுக்குள்ளான ஒரு அசைவை உண்டு பண்ணியது. சபையானது சிறுபான் மையாக ஆகிவிட்டது. மிகவும் சிறுபான்மையாக ஆகி விட்டது. அதன் பிறகு பெந்தெகொஸ்தே, அதில் வரங்கள் திரும்ப அளிக்கப்பட்டது. இப்பொழுது அது சபையை இன்னும் சிறியதாக்கிவிட்டது. எப்படி கூர்நுனி கோபுரம் குறுகிக்கொண்டே போகிறதோ அதைப் போல. சரியாகக் கடைசி காலத்தில், கூர்நுனி கோபுரத்தின் மேல் அந்தத் தலைக்கல் வந்து அமருவதற்கு முன், அதைக் குறித்த காரியம் என்ன? அது என்ன? அப்பொழுது சபையானது உண்மையாகவே சிறுபான்மையாக இருக்கும். "நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய வருகையின் நாட்களிலும் நடக்கும்" அங்கே எட்டு ஆத்துமாக்கள் மாத்திரமே ஜலத்தினால் இரட்சிக்கப்பட்டனர். 92. இப்பொழுது, அந்த மனுஷகுமாரனுடைய வருகை, அது என்ன? சபையானது நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை கடந்து வந்திருக்கிறது. இப்பொழுதோ, முன்மாரியும், பின்மாரியும் இரண்டும் உள்ளே வருகிறது. இப்பொழுது, அது மிகவும் நெருங்கி வந்திருக்கிறது. எப்படி என் கையின் நிழல் படிப்படியாக நெருங்கி வந்து, அருகே வரவர, மேலும் அந்த நிழல் அடர் கருமையாக மாறி பின்பு கையும், நிழலும் ஒன்றாகி விடுகிறதோ அதைப் போல அது மிகவும் நெருங்கி வந்துள்ளது. 93. சபையும் அதனுடைய எல்லா வரங்களும் வெளிச்சங்களும் இன்னும் மற்றவைகளும், மேலும் நாம் நோக்கிப் பார்க்கத்தக்கதாக சபைக்கு அவர் கொடுத்த மகத்தான அடையாளங்களும், அங்கே வெளியே ஒரு உலகம் இருக்கிறது: அத்திமரமானது துளிர் விடுகிறது. பல்வேறு இடங்களில் பூமி அதிர்ச்சிகள் உண்டாகின்றன. மேலும், மற்ற எல்லா காரியங்களும், உலகத்துக்கு சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்தாக இருக்கின்றன. ஆனால், இந்த அடையாளங்கள் தோன்று கிறதை நீங்கள் காண்கிறீர்கள். "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்," "இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த உலகம் என்னைக் காணாது நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனென்றால், உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்" என்றார். இந்த மகத்தான அடையாளங்கள் தோன்றுகின்றனவே அதெல்லாம் என்ன? சபையும் ஆவியானவரும் ஒன்றாக இணையும் வரையில், சபையில் இருக்கிற ஆவியானது இயேசுவை போலவே மாறி அவரை நெருங்கி வருகிறது. அப்பொழுது உயிர்த்தெழுதல் சம்பவிக்கும். 94. விடியற்காலத்து வெளிச்சங்கள்... ஓ, விடிவெள்ளி நட்சத்திரங்களே! உங்களுடைய எச்சரிக்கை மணியை திரும்பப் பொருத்திக் கொள்ளுங்கள். விழித்தெழுந்து உங்கள் முகத்தைக் கழுவுங்கள். இருளை உங்கள் கண்களில் இருந்து விலக்குங்கள். தேவகுமாரனுடைய வருகையின் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்யுங்கள். நீண்ட சுகமாக்குதலுக்கான ஜெப வரிசையானது நீண்ட காலத்துக்கு முன்பாகவே போய்விட்டிருக்க வேண்டும். அற்புதங்களும், தேவனுடைய கிரியை நடப்பித்தலும் மிக அதிக அளவில் இந்நாட்களில் இருப்பதைக் காட்டிலும் மகத்தானதாய் இருக்க வேண்டும். அது அந்த காரியங்களை உறுதிப்படுத்துகிறதாக இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் முன்மாரியையும் பின்மாரியையும் சேர்த்துப் பெற்றுக் கொள்கிறோம். இதுதான் அந்த மணி வேளை. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 95. ஓ! பரலோக பிதாவே, நாங்கள் இப்பொழுது கடைசிக்காலத்தில் இருக்கிறோம். அந்த தேவ குமாரனுடைய வருகையின் நேரமாகிய அந்த மகத்தான நேரத்தை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஓ தேவனே, இங்கேயுள்ள இந்த விடிவெள்ளி நட்சத்திரங்கள் ஒருவேளை சில நாட்களுக்கு மங்கலாக இருக்கக் கூடும். எழுப்புதல் மரித்துக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது சம்பவிக்கும் என்று நீர் சொன்ன அதேக் காரியம் தான், காரிருள், ஆனால் விடிவெள்ளி நட்சத்திரம் வெளிச்சத்தை பிரதிபலிக்கும். "ஜெயம் கொள்கிறவன் எவனோ அவனுக்கு நான் விடிவெள்ளி நட்சத்திரத்தைக் கொடுப்பேன்." மேலும் பிதாவே நான் ஜெபிக்கிறேன், இன்றிரவு நாங்கள் ஒவ்வொருவரும் ஜெயங்கொள்ளுகிறவார்களாய் இருக்கும்படிச் செய்யும். அவிசுவாசத்தை ஜெயிக்கிறவர்கவும். எங்களுக்குள் இருக்கிறவைகளை மேற் கொள்ளுகிறவர்களாகவும், கிறிஸ்து எங்களுக்குள் ஜீவிக்கத்தக்கதாக எங்களை நாங்களே ஜெயிக்கிறவர்களாகவும் இருக்கும்படிச் செய்யும். 96. ஓ கர்த்தாவே, இன்றிரவு உம்முடைய ஆவியை எங்களுக்கு அருளும். எங்கள் பிரசங்கத்தையும், நாங்கள் சொல்லுகிற எல்லா வார்த்தைகளையும் கேட்டு அநேகர் ஒரு வேளை ஆச்சரியப்பட்டு, ஓ எனக்கு இது தெரியாது, இதற்கு முன்பு நான் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன், ஆனால், இப்படி ஒரு காரியம் இருப்பது எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். இதோடு கூட அந்தக் காரியம் இன்றிரவில் நின்று போய் விடாதபடிக் காத்தருளும். முன்மாரியையும், பின்மாரியையும் சேர்த்து எங்களுக்கு தாரும். முன்மாரி என்பது நீர் பூமியிலிருந்த உம்முடைய நாட்களில் நீர் கொண்டு வந்தது. நீர் "அது பின்மாரியோடுக் கூடச் சேர்ந்து மீண்டும் வரும்" என்று சொன்னீர். இப்பொழுது பின்மாரி ஏற்கனவே பொழிந்து விட்டது. இப்பொழுது, முன்மாரி வரட்டும். அதை நீர் ஏற்கனவே செய்து விட்டீர். உயிர்த்தெழுதலின் அடையாளங்களைக் காண்பித்து, நீர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர் என்று நிரூபியும். கிறிஸ்துவின் நாமத்தில் நான் இதைக் கேட்கிறேன். ஆமென். 97. இது கடுமையான விளாசலாய் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், சகோதரனே, சகோதரியே நான் இங்கே நின்று கொண்டு அதைச் செய்ய விரும்பவில்லை. நான் விரும்புகிற ஒரே காரியம் என்னவென்றால், பரிசுத்த ஆவியின் ஐக்கியம் மட்டுமே. மேலும், உங்களுடைய ஆவி அந்தப் பரிசுத்த ஆவியின் ஒரு பாகமாக இருந்து, அதைத் திரும்ப அடையாளம் கண்டு கொள்கிறது. அதை நான் உணர்கிறேன். 98. நாம் இப்பொழுது ஒரு சிறு பாடலை பாடுவோம். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாம் ஜெப அட்டைகளை விநியோகிக் கவில்லை. அது போன்ற ஜெபவரிசையை நான் கொண்டிருக் கவில்லை. ஆனாலும், நான் அதை பிடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பீட அழைப்புகள் தேவை. இங்கே யாராவது பாவியாக இருக்கிறீர்களா? உங்கள் கைகளை உயர்த்தி "சகோதரன், பிரன்ஹாம் நான் ஒரு பாவி, மேலும், கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நான் தேவனோடு கூட என்னை சரிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன், என்று கூறுவீர்களா"? அப்படிச் சொல்லுகிற யாராகிலும் இங்கே இருக்கிறீர்களா? அப்படியே உங்கள் கையை உயர்த்தி "சகோதரன் பிரன்ஹாம் எனக்காக ஜெபியுங்கள். நான் - நான் கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லுங்கள். 99. இந்த இரவு வேளையில், நாம் இங்கே ஒரு சிறுக் கூட்ட மக்களாய் இருக்கிறோம். வெறும் நூறு பேர் அல்லது இருநூறு பேர் கொண்ட மக்கள் கூட்டம். மக்கள் கூட்டத்தைக் கணக்கிடுவதில் நான் திறமை இல்லாதவன். ஆனால், அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் கேட்ட விதமாக ஒருவராகிலும் இங்கே இருப்பீர்களா? ஒரு அனுதாபமான பீட அழைப்பு நமக்குத் தேவையில்லை. நீங்கள் உண்மையில் அவருடைய பிள்ளையாக இருந்தால்... "என் பிதா எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், மேலும் என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்." ஆகவே அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள் உங்கள் இருதயத்திற்குள்ளாக ஒரு ஈர்ப்பை நீங்கள் உணருகிறீர்களா? ஒரு கிறிஸ்தவ சகோதரனாக உன்னிடம் நான் கேட்கிறேன். அப்படி இருந்தால் நீ உன் காலூன்றி நின்று "சகோதரன் பிரன்ஹாம் நீர் எனக்காக ஜெபிக்க நான் விரும்புகிறேன்," என்று சொல்லுங்கள். உண்மையுள்ளவராய் இருங்கள். நான் தேவகுமாரனுடைய வருகையின் வெளிச்சத்தை பிரதிபலித்துக் காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய ஊழியக் காரன் என்கிற முறையில் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். 100. ஒருவேளை அப்படி இல்லை என்றால், ஒரு பின்வாங்கிப்போனவர் யாராகிலும், "சகோதரன் பிரன்ஹாம் நீங்கள் ஜெபிக்கும் போது அடியேனை நினைவு கூரும்" என்று சொல்லலாம். நீங்கள் இன்னும் போதிய அளவுக்கு மெருகேற்றப்படவில்லை எனில், தேவன் உனக்குள் இருந்து தன்னைப் பிரதிபலிக்க முடியாத அளவுக்கு அதிகமான உலகம் உனக்குள் இருக்கிறது. நீங்கள் ஒரு நாளில் ஒரு விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்க அழைக்கப்பட்டிருந்தீர்கள். ஆனால், நீங்கள் அந்தப் புகையின் கீழாக இருந்ததினால் அது உங்கள் வெளிச்சம் முழுவதையும் புகைமண்டிப் போகச் செய்து விட்டது. பரிசுத்த ஆவி உங்களுக்கு எதிராக பிரகாசித்தாலும் நீங்கள் மங்கலாகவே இருக்கிறீர்கள். நீ உட்கார்ந்து கொண்டு, "நான் மிகவும் களைத்துப் போய் இருக்கிறேன்." என்று சொல்கிறாய். "நான் இதற்கு முன்பாகக் கூட்டங்களில் இருந்திருக்கிறேன் ஆனால் அதைபற்றி, எனக்குத் தெரியவில்லை." என்கிறாய். 101. ஓ, நீ எப்படிப்பட்ட பரிதபிக்கப்படத்தக்க நபராய் இருக்கிறாய். ஓ, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உன் ஆத்துமாவைக் கழுவட்டும், அப்பொழுது நீ தேவனுடைய குமாரனுடைய வெளிச்சத்தைப் பிரதிபலிப்பாய், என் நண்பனே. வாலிபர்களே, வயதானவர்களே, அதைச் செய்யுங்கள். செய்வீர்களா? ஒரு நிமிடம் நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். நாம் ஒரு பாடலை பாடுவோம். [சகோதரன் பிரன்ஹாம் பாடலை முணுமுணுக்கிறார்- ஆசி. ] நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் முந்தி அவர் என்னை நேசித்து என் இரட்சிப்பை கல்வாரி மரத்தின் மேல் சம்பாதித்தார். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் முந்தி அவர் என்னை நேசித்து என் இரட்சிப்பை கல்வாரி மரத்தின் மேல் சம்பாதித்தார். 102. ஓ, பிதாவாகிய தேவனே, ஆவியின் அமைதலோடுக் கூட எங்கள் இருதயங்கள் மேல் அசைவாடுவீராக. உம்மை அறியாதவர்கள் இந்த இரவிலே உம்மோடுக் கூட தங்களையும் விடிவெள்ளி நட்சத்திரங்களாக அடையாளம் கண்டு கொள்ளத்தக்கதாக நான் இதைக் கேட்கிறேன். பிதாவே, இதை உம்மிடத்தில் கேட்கிறேன். எங்கள் வாசல்களுக்குள்ளாக வந்திருக்கிற மக்களும், புதியவர்களும் இன்று இரவிலே நீர் இங்கு இருக்கிறீர் என்பதை நீர் அறிந்து கொள்ளச் செய்வீராக. இது உம்மால் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது ஒரு காரியத்தைப் பேசுவது என்பது ஒரு மனிதனுக்கு சுலபமானக் காரியம், ஆனால் நாங்கள் பேசுகிற அந்தக் காரியத்தை நீர் வந்து உறுதிப்படுத்தாவிட்டால் அன்றைக்கு அந்த மோசேக் கேட்டது போல "அவர்கள் என்னை எப்படி நம்புவார்கள்?" 103. மேலும் அவன் செய்யத்தக்கதாக ஒரு அடை யாளத்தை அவனுக்குக் கொடுத்து "இதினால் அவர்கள் என்னை அறிந்து கொள்வார்கள்" என்று சொன்னீர். 104. மேலும், நீர் இன்னுமாக தேவனாகவே இருக்கிறீர். அந்த விடுதலையின் நேரமானது நெருங்கி வந்திருக்கிறது. தேவனே ஜனங்கள் இன்றைய ஆவிக்குரிய எகிப்தையும், சோதோமையும் விட்டு வெளியே வரும்படியாக நான் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். நான் பேசுவது சத்தியம் என்றும் இதுவே அந்த வேளை என்றும் இவர்கள் விசுவாசிக்கும் படியாக அன்றைக்கு சோதோமுக்குக் கொடுத்த அதே அடையாளங்களை இந்தக் கடைசி நாட்களில் நீர் கொடுப்பதாக வாக்குத்தத்தம் செய்தீர். இவை எல்லாவற்றையும் நான் உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். பிதாவே, என் நண்பர்கள், என் சகோதரர்கள் மற்றும் என் சகோதரிகளுடன் ஒன்று கூடி ஐக்கியப்பட்டிருக்கிற இந்த நேரத்தில், நான் என்னையும் இயேசுவின் நாமத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென். [சகோதரன் பிரன்ஹாம் பாடலை முணுமுணுக்க ஆரம்பிக்கிறார். ஆசி.) அவரை நேசிக்கிறேன். ஏனென்றால் முந்தி அவர் என்னை நேசித்தார்.... 105. இப்பொழுது ஒவ்வொருவரும் மிகுந்த அமைத லோடு கூட இருங்கள். எதையாகிலும் செய்யும்படிக்கு நாம் தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். வேதத்தில் ஒரு சிறு பெண்மணியை என்னால் காண முடிகிறது. ஒருமுறை இயேசு கடலில் இருந்து அல்லது ஒரு சிறிய ஏரியைக் கடந்து வருவதை அவள் கண்டு சொன்னாள், "நான் மாத்திரம் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டால் நான் சுகமாகி விடுவேன்". அவளுக்கு நீண்ட காலமாக அந்த உதிரப்போக்கு இருந்திருக்கலாம். மேலும், அவள் சொன்னாள், "அவர் ஒரு பரிசுத்தவான், அவர் தேவ குமாரன், நான் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டால் நான் சுகமாகி விடுவேன்." அவள் போய் அவருடைய வஸ்திரத்தைத் தொடுகிற வரைக்கும் அவள் அந்த ஜனக்கூட்டத்தை தொடர்ந்துத் தள்ளிக் கொண்டே சென்றாள். 106. அவர் திரும்பிப் பார்த்து "என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டார். யாருமே அவள் தான் தொட்டாள் என்று அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்தச் சிறிய பெண்ணால் அவளால் தன்னை மறைத்துக் கொள்ள முடியவில்லை. இயேசு திரும்பி ஜனங்களுக்கு நடுவிலேப் பார்த்தார். அவர் அவளைப் பார்த்து "அவள் விசுவாசித்த காரணத்தினால் அவளுடைய இரத்தப்போக்கு சுகமாகிவிட்டது" என்று சொன்னார். 107. நாத்தான்வேல் சென்று அழைத்தான் அல்லது பிலிப்புச் சென்று நாத்தான்வேலை இயேசு இருந்த இடத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தான். அப்போது அவர் அவனைப் பார்த்து "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். அவன் சொன்னான், "போதகரே நீர் என்னை எப்படி அறிவீர்? " என்று. அவர் சொன்னார், "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே, நீ ஒரு மரத்தின் கீழ் இருந்தபொழுதே நான் உன்னைக் கண்டேன்". ஒரு நாள் முன்பாக, அந்த மலைக்கு அப்பால் பதினைந்து மைல் தூரத்தில். அவன் "ரபீ, நீர் தேவனுடைய குமாரன்" என்று சொன்னான். 108. அவர் சமாரியாவுக்குச் சென்ற போது, அவர் அந்தக் கிணற்றண்டையில் இருந்த பெண்ணிடம் அவளுடைய கணவன்மார்களைக் குறித்துச் சொன்னார். அதற்கு அவள் சொன்னாள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வருவார் என்றும், அவர் வரும்பொழுது இதையெல்லாம் செய்வார்" என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர், "உன்னிடத்தில் பேசுகிற நானே அவர்" என்று சொன்னார். 109. அவள் ஊருக்குள் போய் அந்த ஊர் மனிதர்களிடம், என் இருதயத்தில் உள்ளதை எல்லாம் ஒரு மனிதன் எனக்கு வெளிப்படுத்திச் சொல்லி இருக்கிறார், "நீங்கள் வந்து அவர் மேசியா தானா என்று பாருங்கள்?" என்றாள். நிச்சயமாக அதுவாகத் தான் அவர் இருந்தார். 110. இப்பொழுது, அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்... என்று அவர், "புறஜாதிகளிடத்திற்கு போகாதீர்கள்" சொன்னார். இப்பொழுது, அவர் புறஜாதி களிடத்தில் இதற்கு முன்பு அப்படிச் செய்ததில்லை. பாருங்கள்? நாம் அப்படித்தான் இருந்தோம்... ஆங்கிலோ சாக்சன்கள் அந்நாட்களில் அஞ்ஞானிகளாய் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது நம்முடைய வேளை வந்திருக்கிறது, சாயங்கால வெளிச்சங்கள் இங்கே இருக்கின்றன. "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?" ஓ, விடிவெள்ளி நட்சத்திரங்களே!. 111. இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் இருதயத்திற்குள் இருக்கிற ஒன்று, அது உங்களுக்கு மட்டுமே தெரியும், அதற்குப் பிறகு அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தேவனுக்குத் தெரியும். அப்படி இருக்கிறவர்கள் உங்கள் கையை உயர்த்தி "தேவனே நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடட்டும், நான் இயேசு கிறிஸ்துவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொடட்டும்" என்று ஜெபியுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, நீங்கள் யாராக இருந்தாலும் சரி. 112. எனக்குத் தெரிந்தவரை... ஒரு இரண்டு பேரை மாத்திரம்தான் இப்போதைக்கு எனக்கு இங்கே தெரியும், அது சகோதரன் பேட் டெய்லர் மற்றும் இங்கே இருக்கிற அந்த சிறிய பையன், அவன் சகோதரன் பேட் குடும்பத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர்களில் ஒருவன். ஆனால், பொதுமக்களில் எனக்குத் தெரிந்தவர்கள் இப்போதைக்கு இவர்கள்தான். இல்லையென்றால் அங்கே சகோதரி வால்ட்ராப் சற்று நேரத்துக்கு முன்பாக இருந்ததை நான் பார்த்தேன். சகோதரி ஹாட்டி வால்ட்ராப் அவள் இங்கே இருந்ததை இந்த கட்டிடத்திற்குள் எங்கோ பார்த்தேன். ஆம், சரியாக இங்கேதான். எனக்குத் தெரிந்தவரை எனக்கு முன்பாக நிற்கிறவர்களில் அவர்களை மட்டும் தான் எனக்கு தெரியும். நீங்கள் ஜெபியுங்கள். 113. வேதம் சொல்லுகிறதா...? இப்பொழுது, கவனியுங்கள். நான் இங்கே நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கலாம்; நீங்கள் அவை எல்லாவற்றையும் தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், வேதம் சொல்லுகிறது கடைசி நாட்களில் சரியாக இந்த நேரத்தில், கர்த்தருடைய வருகைக்கு முன்பாக இந்த பூமியின் மேல் ஒரு ஆவி வரும், அது மாம்சத்தின் திரையைப் போட்டுக் கொண்டு - ஒரு மனிதனாக, அன்றைக்கு சோதோமில் நடந்தது போல மனதின் யோசனைகளைப் பகுத்தறியக்கூடியதாக இருக்கும். அங்கே அந்த தூதன் செய்தது போல, சோதோமின் நாட்களில் நடந்தது போல. எத்தனைப் பேருக்கு இது புரிகிறது? அப்படியே உங்கள் கைகளை உயர்த்துங்கள். அதுதான், நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள், உங்களுக்கு தெரியும்? பாருங்கள்! அது சரியாக அப்படித்தான். இப்பொழுது, அன்றைக்கு அது யாராக இருந்தது? அது அந்த மனிதனுக்குள் இருந்த கிறிஸ்து. இப்பொழுது அவர் ஒரு மனிதனாய் இருந்தார். அவர் ஒரு தியோபனியாய் இல்லை. அவர் ஒரு கற்பனை இல்லை. அவர் ஒரு கற்பனை இல்லை. அவர் ஒரு மனிதனாக இருந்தார். இறைச்சியைப் புசித்து, பாலைக் குடித்து, அப்பத்தைச் சாப்பிட்டார். 114. இப்பொழுது, நான் அந்த மனிதன் இல்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவினுடைய ஆவி இங்கே இருக்கிறது, மேலும் நீங்கள் அந்த மனிதனாய் இருக்கலாம், அல்லது அவர் உள்ளே இருந்துகொண்டு கிரியைச் செய்யத்தக்கதான அப்படிப்பட்டவராய் இருக்கும்படி அவர் தெரிந்து கொள்கிற வேறு யாராகவும் இருக்கலாம். இப்பொழுது... "ஜெயங்கொள்கிறவன் எவனோ," தன்னைத்தான் ஜெயம்கொள்வது, தன்னுடைய சொந்த எண்ணங்களை ஜெயம்கொள்வது, உலகத்தை ஜெயம்கொள்வது, எல்லாவற்றையும் ஜெயம்கொள்வது, 'அதன் பிறகு அவன் அந்த வெளிச்சத்தைப் பிரகாசிக்கத்தக்கதாக விடிவெள்ளி நட்சத்திரத்தை நான் அவனுக்குக் கொடுப்பேன்." எந்த வெளிச்சம்? நெருங்கி வந்து கொண்டிருக்கிறதான குமாரனின் வெளிச்சம். 115. உங்களுக்கு ஒரு - உங்களுக்கு ஒரு பலவீனம் இருந்தால், வேதம் அப்படி போதிக்கிறதா? நான் இந்த ஊழியக்காரர்களையும் மற்றும் இங்குள்ள எல்லாரையும் கேட்கப் போகிறேன், வேதம் அப்படி போதிக்கிறதா? இப்பொழுதும் நம்முடைய பலவீனங்களின் நிமித்தம் தொடப்படக்கூடியப் பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்று வேதம் கூறுகிறதா? அதை விசுவாசிக்கிற எல்லாரும் உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஊழியக்காரர்களே, அது சரிதானா? 116. இப்பொழுது, அவர் அன்றைக்கு இருந்தது போலவே அதேப் பிரதான ஆசாரியராக இன்றைக்கும் இருப்பார் என்றால், அவருடைய மாம்ச சரீரம் மாத்திரமே பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறது. ஆனால், அவருடைய ஆவி இங்கே இருந்து கொண்டு அவருடைய சபையில் கிரியைச் செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? மேலும் சபை, விடிவெள்ளி நட்சத்திரம் அவருடைய வெளிச்சத்தை பிரகாசித்துக் கொண்டிருக் கின்றது. இப்பொழுது, அந்த நட்சத்திரம் எப்பொழுது பிரகாசிக்கிறது? அது இரவு முழுவதும் பிரகாசிப்பதில்லை. அது பகலின் வெளிச்சத்திற்கு முன், பொழுது விடிவதற்கு சற்று முன்பாக, வந்து கொண்டிருக்கிறதான அந்தச் சூரியனின் வெளிச்சத்தை அது பிரகாசிக்கிறது. 117. இப்பொழுது, அது அந்நாளிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அது இருந்ததில்லை, ஏனென்றால், இயேசு, "அது இருக்காது" என்று சொன்னார். அது சரி. ஆனால், இப்பொழுது நாம் இங்கே இருக்கிறோம். இப்பொழுது இந்த வார்த்தையை எழுதினவராகிய பரலோகத்தின் தேவன், மரித்தவரும், மறுபடியும் எழுந்தவரும் என்றென்றும் ஜீவிக்கின்ற பிரசன்னத்தையுடையவராகிய தேவக்குமாரன்-தேவகுமாரனாகிய பிரதான ஆசாரியனுமாகியவர், என்னிடம் வரட்டும். பேசட்டும், என் சரீரத்தைப் பயன்படுத்தட்டும், என் உதடுகளை பயன்படுத்தட்டும். ஏனெனில் அவருக்கு இருக்கும் ஒரே உதடுகள், உங்களுடையதும், என்னுடையதும் மட்டுமே ஆகும். 118. பாருங்கள்! அவருடைய சரீரம் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறது. அது திரும்பி வராது, அது திரும்பி வரும் பொழுது எல்லாம் முடிந்து போயிருக்கும். ஆனால், அவருடைய ஆவி இங்கே இருந்து கொண்டு கிரியைச் செய்து கொண்டிருக்கிறது. அவர் சொன்னார், "நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்." செடியானது கனி கொடுப்பதில்லை. அது கொடிகள் கனி கொடுக்கும் படியாக அவைகளுக்கு ஜீவனை மாத்திரமே கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, அந்தச் செடியில் எப்படிப்பட்ட ஜீவன் இருக்கிறதோ அதே விதமான கனியைத் தான் அந்தக் கொடிகள் கொடுக்கின்றன. மேலும், இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருப்பார் என்றால், அது அதே ஜீவனை உற்பத்திச் செய்யும். 119. இப்பொழுது, அவர் பிரதான ஆசாரியராக இருந்தால், அப்பொழுது நீங்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொடமுடியும். நீங்கள், "ஓ, நான் அவரைத் தொடமுடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்," என்று சொல்லலாம். ஆம், ஆம், நான் விசுவாசிக்கிறேன்... 120. இப்பொழுது, "அவர் இங்கே இருந்தபொழுது அப்படி நடந்து கொள்ளவில்லை". அந்த பெண்மணி அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபொழுது. அவர் திரும்பிப் பார்த்து அவளை அழைத்தார். அது சரியா? அவர் அதேப் பிரதான ஆசாரியராய் இருப்பார் என்றால், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருப்பார் என்றால், அவர் அதே போல நடந்து கொள்வார். 121. இப்பொழுது, நீங்கள் ஜெபியுங்கள். பரலோ கத்தின் தேவன் தாமே, எங்கள் விலையேறப் பெற்ற பரலோகப் பிதாவே, இதை தந்தருளும்... மேலும், அவர் அதைச் செய்வார் என்றால், நீங்கள் எத்தனை பேர் அதைக் குறித்து சந்தோஷப்பட்டு அவரை நேசிப்பீர்கள்? அப்படியே உங்கள் கைகளை உயர்த்திச் சொல்லுங்கள். 122. பாருங்கள், நாம் ஒன்றைப் பெற்றுக் கொண்டாக வேண்டும், நான் - நான் இதுவரை ... நான் பிரசங்கித்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு சில இரவுகளில் நாம் அதற்குள் செல்வோம். நண்பர்களே நான் இதை உங்களுக்குச் சொல்லட்டும், இங்கே இருக்கிற இந்த ஊழியமானது அது தொடர்ந்துச் செல்லும். ஆனால், அங்கே ஒரு காரியம் இருக்கிறது. அதாவது என்னை அறிந்த மனிதர்கள் இது உண்மை என்று அறிவார்கள். அதாவது சில வாரங்களுக்கு முன்பு ஏதோ ஒன்று சம்பவித்தது, அது மிகவும் மகத்தானது. நான் அதை இந்தப் பொதுமக்கள் மத்தியில் சொல்ல மாட்டேன். ஆனால் அதை அறிந்த மனிதர்கள் இங்கே உட்கார்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். சரியாக இங்கே. அது ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது. பாருங்கள்? அது சரி. அது உண்மை. அது எல்லாவற்றையும் தாண்டியது.. 123. நினைவுக் கூருங்கள். நான் முதலில் வரும் பொழுது, என்ன வரப்போகிறது என்று உங்களுக்கு சொல்லியிருந்தேன். அந்தக் காரியம் நிறைவேறியது. அதன் பிறகு வந்து வேறொன்றைச் சொன்னேன். இந்த பகுத்தறிதல் சம்பவிக்கும் என்றும், அதை நீங்கள் காண் பீர்கள் என்றும் சொன்னேன். இப்பொழுது அது நடந்து விட்டது. இப்பொழுது, நான் உங்களுக்குச் சொல்லு கிறேன், இது ஏற்கனவே வந்துவிட்டது. இது அந்த மணி வேளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. அங்கே அந்த பொழுது விடிவதற்கு முன்பாக, அது கிட்டி வரும் அதன் பிறகு முடிவு இருக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க நான் ஜெபிக்கிறேன். 124. இப்பொழுது ஜெபியுங்கள், சொல்லுங்கள், "ஓ தேவனுடையப் பிரதான ஆசாரியரே, ஓ... [ஒலிநாடாவில் காலியிடம் ஆசி] 125. இது... இங்கே, நீங்கள் ஒரு நிமிடம் உங்கள் தலைகளை உயர்த்தலாம். கடைசியில் இருந்தது அந்த பெண்மணிதான் என்று நான் நினைத்தேன். இது, இந்த-இந்த பெண்மணி இங்கே உட்கார்ந்துக் கொண்டி ருக்கிறாள். அவள், தன்னுடைய பிரச்சனையான நீர்க் கோவையால் (இது ஒரு வியாதி-தமி) அவதியுறுவதால் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது சரி. உங்களை எனக்குத் தெரியாது. ஆனால், தேவனுக்கு உங்களைத் தெரியும். ஆனால், அதற்காகத்தான் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் உண்மையா கவே ஒரு விநோதமான, இனிமையான உணர்வை உங்களைச் சுற்றிலும் உணருகிறீர்கள். அது சரிதானே? நீங்கள் ஒரு நிமிடம் எழுந்து கால் ஊன்றி நிற்பீர்களா? அது உண்மையா? நான் சொன்னது சரியா? அது உண்மை. 126. இங்கே, ஒரு நிமிடம் பொறுங்கள். அந்தப் பெண்மணியை குறித்து அங்கு வேறு ஏதோ ஒரு காரியம் இருக்கிறது. அவள் நிழலிடப்பட்டு இருக்கிறதையும் அவள் மேல் மரணம் இருக்கிறதையும் நான் காண்கிறேன்.. ஆம். நீ என்னுடைய கூட்டங்களில் இதற்கு முன்பு இருந்திருக்கிறாய். அப்பொழுது உனக்குப் புற்றுநோய் இருந்தது. அந்தப் புற்றுநோய் உன்னுடைய நுரையீரலில் இருந்தது. மேலும், நான் உனக்காக ஜெபித்தேன், அதற்குப் பிறகு இரண்டாவது நாள் நீ இருமி அந்த புற்றுநோயை உன் வாயிலிருந்து வாந்திப் பண்ணினாய். அன்றிலிருந்து நீ ஆரோக்கியமாக இருக்கிறாய். அது கர்த்தர் உரைக்கிறதாவது. 127. நான் சொன்ன அந்தக் காரியங்கள் உண்மையா? அதுதான் காரியம். நீங்கள் இப்போது உட்காரலாம். நீ எதை கேட்டாயோ அதைப் பெற்றுக் கொண்டாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 128. நீ தேவன் மேல் விசுவாசம் வை. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவே அன்றி இதை வேறு யார் செய்ய முடியும்? 129. இங்கே, ஒரு சிறு பெண்மணி சரியாக அங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறதை நான் பார்க்கிறேன். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இருதயத்திலே ஒரு பாரம் இருக்கிறது. அவளை எனக்குத் தெரியாது. அவள் அதைப் பெற்றுக் கொள்வாளா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆம். இங்கே அவளுடைய பெயர் திருமதி. சாண்ட். அவள் மனநிலை சரியில்லாத தன்னுடைய மகளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். கர்த்தராகிய இயேசு அந்தப் பெண்ணை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அதுதான் உன் பெயர் என்றால், அதுதான் உண்மை என்றால், நீ எழுந்து காலூன்றி நில். உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. சரி. 130. எனக்கு அந்தப் பெண்ணை தெரியாது. எனக்குத் தெரிந்தவரை என் ஜீவியத்தில் நான் அவளைக் கண்டதே இல்லை. ஆனால், சொல்லப்பட்டதெல்லாம் உண்மைதானா பெண்மணி? அப்படி என்றால், நல்லது... வீட்டிற்குச் செல். தேவன் உன்னுடைய வாஞ்சையை நிறைவேற்ற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். விசுவாசம் கொள். சந்தேகப்படாதே; விசுவாசி. 131. சரியாக, இங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். எனக்கு அவரைத் தெரியாது. அவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. ஆனால், அந்த ஒளியானது அவர் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடைசி நிமிடத்தில் அங்கே ஏதோ ஒன்று சம்பவித்தது. அந்த மனிதனுக்கு அவருடைய இருதயத்திலே ஒரு பாரம் இருக்கிறது. அவருடைய முதுகில் ஒரு விதமான அதிர்வுத் தொல்லை அவருக்கு இருக்கிறது. அவருக்கு நுரையீரல் பிரச்சனையும் கூட இருக்கிறது. மேலும், அவர் ஆம், அவர் மனநிலை பிரச்சனை கொண்ட ஒரு மகளுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். திரு.லாங்ஃபார் (Mr.Langfar) அதுபோல ஏதோ ஒன்று. அது சரி ஐயா! நீர் உம்முடைய காலூன்றி எழுந்து நின்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை ஏற்றுக்கொள்ளும். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக ஐயா. 132. என்ன நடந்தது என்று பாருங்கள், இந்த ஸ்திரீயிடமிருந்து அந்த மனிதன் வரை. இரண்டு பேரும் ஒரே காரியத்திற்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பொல்லாத ஆவி. இப்பொழுது, நினைவு கூருங்கள். எனக்கு உங்களைத் தெரியாது. தெரியுமா ஐயா? உங்களில் ஒருவரையும் எனக்குத் தெரியாது. அது சரி. ஆனால், இங்கே பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதைப் பாருங்கள். எப்படி அந்த பிசாசு அந்த இணைப்பை துண்டித்துப் போட முயற்சிக்கிறான், ஆனால், பரிசுத்த ஆவியானவர் நேராக அங்கே ஓடிச் செல்கிறார். அவளுக்கு என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்த உடனே அதேக் காரியத்தை நீங்களும் பிடித்துக் கொண்டீர்கள். அது சரியென்றால் உங்கள் கையை இவ்விதமாக அசைத்துக் காட்டுங்கள். அந்த மனிதன் அழைக்கப்பட்டார். நல்லது, அவ்வளவுதான். நான் அவருடைய எண்ண ஓட்டத்தை வாசிக்கவில்லை. எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், அதுச் சரியாக உண்மையாய் இருக்கிறது. 133. என்னால் சுகமாக்க முடியாது, ஆனால், நீங்களும் உங்களுடைய ஜீவியத்தை இப்பொழுது மறைக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அது ஒரு வரமாய் இருக்கிறது. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால்... 134. இப்பொழுது, இங்கே ஒரு பெண் உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறதை நான் பார்க்கிறேன். ஒரு நிமிடம். பரிசுத்த ஆவியானவருடைய அந்த ஒளி, அந்த அக்கினி ஸ்தம்பம் அந்த பெண்ணுக்கு மேலாக இருக்கிறது. நல்லது, அது ஒரு விநோதமானக் காரியமாய் இருக்கிறது. அவளுடைய இருதயத்திலே ஒரு பாரம் இருக்கிறது. அவள் வேறொரு பெண்ணுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு ஒரு கீழ்ப்படியாத மகன் இருக்கிறான், அவனுக்காகத் தான் அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் அந்தப் பையன் சரியாகிவிடுவான். 135. ஒரு சிறியப் பெண் சரியாக இங்கே பின்னால் தன் தலையை கவிழ்த்தவாறு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு கண்ணில் கோளாறு இருக்கிறது, அதற்காக அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இதற்கு முன்பாகவே என்னுடைய கூட்டங்களில் ஒன்றில் சுகத்தைப் பெற்றுக் கொண்டாள். அவளை ஜெப வரிசையில் நான் காண்கிறேன். உன்னுடைய முழு இருதயத்தோடும் நீ விசுவாசித்தால், நீ எதைக் கேட்கிறாயோ அதைப் பெற்றுக் கொள்வாய். 136. பின்னால் அங்கே, அந்தப் பெண்மணி... நீ எதையோக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்... அது ஒரு ஜெபிக்கப்பட்ட - ஜெபிக்கப்பட்ட உறுமால், ஒரு கைக்குட்டை அதை ஜெபிப்பதற்காக நீ அங்கே வைத்திருக்கிறாய், அல்லது நீ இங்கேக் கொண்டு வந்திருக்கிறாய், நீ நாளைக்குப் புறப்பட வேண்டியது. நீ புறப்பட்டாக வேண்டும். ஆகவே, உனக்கு இந்த கைக்குட்டைகளை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். யாருக்காக இந்த கைக்குட்டைகளை ஜெபித்துக் கொண்டு செல்லுகிறீர்களோ அவர்கள் சுகம் அடைவார்கள் என்று நீங்கள் விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆமென். 137. அது என்ன? பரிசுத்த ஆவி. 138. உங்களைக் குறித்து என்ன? இங்கே அந்தச் சக்கர படுக்கையில் படுத்திருக்கிற பெண்மணியே, நீங்கள் என்னை ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? என்னால் உங்களைச் சுகமாக்க முடியாது, பெண்மணி. நீ மிகவும் வியாதியுற்று இருக்கிறாய். மிக மோசமான அளவில் வியாதிப் பட்டிருக்கிறாய். உனக்குச் சொல்லப்பட்டதை காட்டிலும் மோசமான அளவில் நீ வியாதிப்பட்டிருக்கிறாய். ஆனால், உன்னுடையத் தொல்லை என்னவென்று நான் உனக்குச் சொன்னால் அல்லது அது எங்கே இருக்கிறது என்று நான் சொன்னால் அது உன்னை தேவனை விசுவாசித்து அவரை உன்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளச் செய்யுமா? இதுவே கிறிஸ்துவின் மூலமாக உனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை ஆகும். அது உன் இரத்தத்தில் இருக்கிறது. அது சரி. மிகவும் மோசமான நிலை. நீ யாரென்று ஒருவேளை நான் உனக்குச் சொன்னால், பரிசுத்த ஆவியினால் தான் நீ யார் என்பதை நான் கண்டுகொள்ள முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு தேவனோடு ஒரு தொடர்பு இருக்கிறது. திருமதி. ஸ்மித் உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால் நீங்கள் எழுந்திருந்து நேராக உங்கள் வீட்டுக்குப் போகலாம். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? அந்தக் காரியங்கள் எல்லாம் உண்மை, அப்படித்தானே? அப்படி என்றால், உங்கள் காலூன்றி நில்லுங்கள். உங்கள் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் அடைவீர்களாக! அவர் உங்களுக்கு பெலனளிப்பாராக. அங்கிருந்து எழுந்திருந்து, உங்கள் படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். விசுவாசியுங்கள். 139. நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா? 140. பயப்படாதீர்கள். தேவையான பெலனை அவர் அளிப்பார்... அவர்... 141. எதன் பேரில் அவர்கள்... கிரியைச் செய்யும் படி அவர்களைக் கூட்டிச் சேர்க்க வேண்டும். சரி. 142. நீங்கள் எல்லாரும் இப்பொழுது, விசுவாசிக் கிறீர்களா? இங்கே இருக்கிற உங்களில் எத்தனைப் பேர் இப்பொழுதே சுகமாக விரும்புகிறீர்கள்? பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? சாயங்கால வேளையிலே என்ன சம்பவிக்கும் என்று அவர் சொன்னாரோ அவ்வித மாகவே சரியாக அதேவிதமாகவே அது இருக்கிறதா? அங்கே வெளிச்சம் உண்டாகும் என்று சொல்லப்பட்டது. என்ன விதமான வெளிச்சம்? கிழக்கிலே தோன்றிய அதே பிரதான ஆசாரியருடைய வெளிச்சம் மேற்கி லேயும் பிரகாசிக்கிறது, அதே தேவன், அதே வல்லமை. "ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது?" 143. ஓ, விடிவெள்ளி நட்சத்திரங்களே, விசுவாசி களாய் இருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கைகளை உயர்த்துங்கள். இப்பொழுது உங்களுக்கு அருகில் இருக்கிற யாராவது ஒருவர் மேல் உங்கள் கைகளை வையுங்கள். அவருடைய வார்த்தையை நான் உங்களுக்கு மேற்கோளிடட்டும். அவர் என்னச் சொன்னார் என்று நான் உங்களுக்குச் சொல்லட்டும்: "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்." அதை யார் சொன்னது? இங்கே இருக்கிற அதே நபர் தான் அதைச் சொன்னார். அவரே தான் தம்மை நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார். "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்" என்று சொன்னார்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். [இன்னும் வேறு ஏதாவது சக்கர நாற்காலிகள் இங்கே இருக்கின்றனவா? இன்னும் ஏதாவது படுக்கைகள்? சக்கரப் படுக்கைகள் இங்கே இருக்கிறதா? அவை எங்கே இருக்கின்றன?] நல்லது. ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கைகளை வையுங்கள். 144. எங்கள் பரலோகப் பிதாவே, "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறது எதுவோ அதையே அன்றி வேறொன்றையும் நான் செய்வதில்லை" என்று நீர் சொன்னது போல, அதே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை இவர்கள் பிரதிபலிக்கத் தக்கதாக இந்த மக்களை எல்லாம் விடிவெள்ளி நட்சத்திரங்களாக உம்மிடத்தில் கொண்டு வருகிறோம். அவர்கள் தங்கள் சுகத்தை விசுவாசித்து ஒருவர் மேல் ஒருவர் தங்கள் கைகளை வைத்துள்ளனர். கர்த்தாவே பரிசுத்த ஆவியா னவர் பிரகாசித்துத் தம்மை இங்கே நிரூபித்தது போல, இவர்களும் இப்பொழுது பிரகாசிக்கட்டும். அந்த நட்சத் திரங்களின் மேல் பிரகாசிக்கிற அந்தக் குமாரன் அவர் தான். இவர்களெல்லாம் உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுவின் வல்லமையின் வெளிச்சத்தை பெற்றுக் கொண்டு இப்பொழுது சுகம் அடைவார்களாக. பரிசுத்த ஆவியின் பிரசன்னத்துக்குள்ளாக நின்று கொண்டிருக்கிற நான், இந்த கட்டிடத்திற்குள்ளாக இருக்கிற ஒவ்வொரு வியாதியையும் கடிந்து கொள்ளுகிறேன். இப்பொழுது இங்கே இருக்கிற பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தில், தேவனுடையத் தூதனுடையப் பிரசன்னத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு வியாதியையும் நான் கடிந்து கொள்கிறேன். 145. ஓ, இந்த விடிவெள்ளி நட்சத்திரங்களைப் பிடித்து வைக்க முயற்சிக்கிற, அவர்களுடைய வாழ்க்கையை புகைந்து போகச் செய்யும்படி முயற்சித்துக் கொண்டிருக்கிற பிசாசுகளே... 146. அவர்கள் எழும்பிக் கொண்டிருக்கிறார்கள், தங்கள் தீவட்டிகளை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்திக் கொண்டு, புதிய விசுவாசத்தைக் கொண்டு தங்களுடைய தீவட்டிகளைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதைக் கொண்டு ஒவ்வொரு வியாதியையும் எரித்துப் போடு வார்களாக. அந்த வெளிச்சம் பிரகாசிப்பதாக. அவர்கள் எழும்பிப் பிரகாசித்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப் படுத்துவார்களாக. கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த சாட்சியின் வெளிச்சமானது அவர்கள் மூலமாய் பிரகாசிக்கத்தக்கதாக அவர்கள் தங்கள் புகைப் போக்கிகளைச் சுத்தம் செய்வார்களாக. 147. சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டுப் போனாய். நீ அம்பலப்படுத்தப்பட்டு விட்டாய். ஏன், எந்தவொரு பொதுவான, சாதாரண மனித அறிவுடைய மனிதனும் இத்தகையக் காரியங்களை எந்தவொரு சாதாரணமான மனிதனாலும் செய்ய முடியாது என்று அறிந்து கொள்ளுவான். இதைச் செய்வதற்கு பரிசுத்த ஆவியின் வல்லமைத் தேவைப்படுகிறது. மேலும் அதுதான் அவருடைய வாக்குத்தத்தமாக இருக்கிறது. அதுதான் அவருடைய வார்த்தை. மேலும், அவர் அதை நிறைவேற்றி இருக்கிறார். மேலும், ஆகவே சாத்தானே நீ இப்பொழுது தோற்கடிக்கப்பட்டுப் போனாய். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வெளியே வா. இந்த ஜனங்களை விட்டு வெளியே போ. 148. இவர்கள் புறப்பட்டுச் சென்று சுகமாய் ஜீவிப்பார் களாக. நான் இதைத் தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். 149. நீங்கள் அவர் மீது விசுவாசம் வைக்கிறீர்களா? நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? அப்படி யென்றால், இனி ஒருபோதும் எதிர்மறையான சாட்சியைக் கொண்டிருக்காதீர்கள். வாக்குத்தத்தம் செய்த அதேப் பரிசுத்த ஆவியானவர், மரித்த அதேக் கிறிஸ்து, அதே விடிவெள்ளி நட்சத்திரம், இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திச் சென்ற அதே அக்கினி ஸ்தம்பம், இயேசுவின் மூலமாக கிரியைச் செய்த அவரே தேவனிடத்துக்கு திரும்பிச் சென்று மீண்டும் தமஸ்குவுக்கு போகிற வழியிலே பவுலைக் குருடனாகும்படி அடித்த அதே மகத்தான வெளிச்சம் (இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்த அதே மகத்தான வெளிச்சமாக இருக்கிறார்) அதேக் காரியம்தான் இன்றிரவு இங்கே இருக்கிறது. சோதோமின் நாட்களில் மனித சரீரத்தில் வந்து இறைச்சியைப் புசித்து, உணவை உண்ட அதே நபர் இப்பொழுதும் மனித சரீரத்திற்குள் வந்து அதேக் காரியங்களைச் செய்கிறார். மேலும், அவர் "மனுஷகுமாரனுடைய நாட்களிலும் அப்படியே நடக்கும்" என்று சொன்னார். 150. அதுதான் பரிசுத்த ஆவி. அவர் இங்கே இருக்கிறார், அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் உங்களுடையவர். நீங்கள் விடிவெள்ளி நட்சத்திரங்கள். உலகத்தின் காரியங்களில் போதைக் கொண்டிராதீர்கள். சம்பவித்த அற்பக் காரியங்களை கண்டு அதில் கிளர்ச்சி அடைந்து விடாதீர்கள். அதற்கு மேலாக ஏறிச் சென்று, நீங்கள் ஒவ்வொருவரும் இன்று இரவிலே கிறிஸ்துவைப் பெற்றுக்கொண்டு சுகமாகுங்கள். நான் இந்த ஆராதனையைப் போதகரிடம் ஒப்படைக்கிறதான இந்த வேளையிலே கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை நான் அவரிடம் சமர்ப்பிக்கிறேன். 151. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே!